For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News: பலத்த பாதுகாப்புடன் தஞ்சை பெரிய கோயிலில் வைக்கப்பட்டது ராஜராஜன் சிலை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு ஐநா மனித உரிமை வல்லுநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

மீட்கப்பட்ட ராஜராஜசோழன் உலகமாதேவி சிலைகள் கும்பகோணம் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தஞ்சை பெரியகோவிலில் மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது

இன்றைய முக்கிய அப்டேட்டுகளை உடனுக்குடன் இப்பக்கத்தில் காணலாம்

Newest First Oldest First
10:34 PM, 1 Jun

திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் நாளை முக்கிய முடிவு

திருவாரூரில் கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் அறிவிப்பு

மக்கள் விரும்பும் முடிவை மா.செ.க்கள் கூட்டத்தில் எடுப்போம்- ஸ்டாலின்

8:53 PM, 1 Jun

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழன் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு

ராஜராஜன் உலகமாதேவி சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு
8:06 PM, 1 Jun

மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் நாளை தூத்துக்குடி செல்கின்றனர்
ஸ்டெர்லைட் போராட்டம் நடந்த பகுதிகளில் ஆணைய உறுப்பினர்கள் ஆய்வு
போராட்டத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களிடமும் விசாரணை
7:35 PM, 1 Jun

காவிரி ஆணையம் - அரசிதழின் நகல் இணையத்தில் வெளியானது
காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பு மத்திய அரசிதழில் மாலை வெளியானது
அரசிதழில் வெளியான அறிவிப்பு தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டது
அரசிதழ் நான்கு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது
உச்ச நீதிமன்ற தீர்ப்பு விவரங்கள் அரசிதழில் உள்ளது
காவிரி வாரியத்தின் செயல்பாடு உள்ளிட்ட விவரம் அரசிதழில் உள்ளது
7:03 PM, 1 Jun

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா திருவாரூரில் தொடங்கியுள்ளது

கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் ஜூன் 3-ம் தேதி வருகிறது

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் விழாவிற்கு தலைமை தாங்குகிறார்

உடல்நிலை காரணமாக கருணாநிதி விழாவில் கலந்து கொள்ளவில்லை

மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் விழாவில் முன்னிலை வகிக்கிறார்கள்

கி.வீரமணி, திருநாவுக்கரசர், வைகோ, காதர் மொய்தீன், கே.பாலகிருஷ்ணன்

முத்தரசன், திருமாவளவன், ஜவாஹிருல்லா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்
6:40 PM, 1 Jun

திண்டுக்கல் அருகே மதுபானம் ஏற்றி வந்த லாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு

வெல்லபொம்மனம்பட்டி அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பெட்ரோல் குண்டு வீச்சு

பெட்ரோல் குண்டு வீச்சால் லாரி எரிந்து நாசம்

6:35 PM, 1 Jun

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன்

ஜூன் 6-ம் தேதி நேரில் ஆஜராக ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன்

6:09 PM, 1 Jun

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்
நிர்மல் குமார், ஆஷா, சுப்பிரமணிய பிரசாத் , ஆனந்த் வெங்கடேஷ்
சரவணன், இளந்தரியன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
5:19 PM, 1 Jun

கர்நாடகாவில் ஜூன் 6-ல் அமைச்சர்கள் பதவி ஏற்பு
அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வர் குமாரசாமி
4:53 PM, 1 Jun

காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியீடு
பருவமழை தொடங்கும் முன் அரசிதழில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
மத்திய நீர்வளத்துறை சார்பில் அரசிதழில் வெளியிட பரிந்துரை கடிதம் தரப்பட்டது
4:03 PM, 1 Jun

தூத்துக்குடி: திங்கள் கிழமை விசாரணையை தொடங்குகிறார் அருணா ஜெகதீசன்
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை ஆய்வு
துப்பாக்கி சூட்டை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது
2:24 PM, 1 Jun

வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் தந்தால் ரூ.50 லட்சம் சன்மானம் - வருமான வரித்துறை
வெளிநாடுகளில் உள்ள கருப்புப்பணம் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.5 கோடி சன்மானம்
1:46 PM, 1 Jun

பலாத்கார வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய நித்தியானந்தா மனு தள்ளுபடி
நித்தியானந்தாவின் மனுவை ராம்நகர் நீதிமன்றம் தொடர்ந்து தள்ளுபடி
பலாத்கார வழக்கை விரைந்து விசாரிக்கவும் நீதிமன்றம் உத்தரவு
1:39 PM, 1 Jun

கடலூரில் செல்போன் டவரில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி தற்கொலை மிரட்டல்
வேல்முருகனை விடுதலை செய்யாவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்வதாக மிரட்டல்
45 நிமிட போராட்டத்திற்கு பின்னர் நிர்வாகியை கைது செய்தது போலீஸ்
1:28 PM, 1 Jun

கூவத்தூர் ரகசியம் பற்றி பேசிய கருணாஸுக்கு குறி... தூசி தட்டப்படும் புகார்கள்!
1:15 PM, 1 Jun

தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு போலீஸ் தொல்லை தரக்கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை
விசாரணை என்ற பெயரில் மக்களை போலீசார் துன்புறுத்தக் கூடாது
கலவரம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் எங்கே? - உயர் நீதிமன்ற கேள்வி
1:11 PM, 1 Jun

எஸ்.வி சேகருக்கு முன்ஜாமீன் இல்லை- உச்சநீதிமன்றம்
எஸ்வி சேகரை கைது செய்ய விதித்த தடை நீக்கம்
1:07 PM, 1 Jun

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கு ஜெ. பெயர்
12:53 PM, 1 Jun

நடிகர் ரஜினிகாந்த் மீது நாம் தமிழர் கட்சி வழக்கு
சமூகவிரோதிகள் ஊடுருவியது பற்றி தமக்கு தெரியும் என ரஜினி கருத்து
சமூகவிரோதிகள் பற்றி போலீசிடம் ரஜினி தெரிவிக்காதது குற்றம்- நாம் தமிழர் கட்சி
ரஜினி மீது நடவடிக்கை கோரி டிஜிபி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி மனு
ரஜினி மீது வழக்கு தொடரவும் நாம் தமிழர் கட்சி நடவடிக்கை
12:35 PM, 1 Jun

தூத்துக்குடியில் ரஜினியை கேள்வி கேட்ட இளைஞர் மீது வழக்கு போட முயற்சியா?
தேசிய கொடியை எரித்த திலீபனுடன் தொடர்புள்ளதாக பொய் தகவல்- இளைஞர் குமுறல்
வழக்கு பதிவு செய்தால் எதிர்காலமே பாதிக்கப்படும் என இளைஞர் சந்தோஷ் பேட்டி
12:29 PM, 1 Jun

சட்டசபையில் இருந்து டிடிவி தினகரன் வெளிநடப்பு
மூடிய மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு முயற்சிப்பது ஏன்?: டிடிவி.தினகரன்
810 மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு முயற்சிப்பதாக தினகரன் குற்றச்சாட்டு
மதுக்கடைகளை மேலும் மூடாமல் புதிதாக திறப்பது சரியல்ல - தினகரன்
நான் மது ஆலை எதுவும் நடத்தவில்லை - தினகரன்
12:29 PM, 1 Jun

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு
கேமிரா பொருத்திய ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு
அரசு ஆஸ்பத்திரி அருகே குடியிருப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கண்காணிப்பு
11:59 AM, 1 Jun

ரஜினிகாந்தின் டார்ஜிலிங் பயணம் ஒத்தி வைப்பு
தம் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில் ரஜினி பயணம் ஒத்திவைப்பு
11:41 AM, 1 Jun

தூத்துக்குடியில் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடப்பட்டது? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக வரும் 6 ஆம் தேதி பதிலளிக்க தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
11:34 AM, 1 Jun

குரூப்-1, குரூப்-1ஏ, குரூப்-1பி தேர்வுக்கான வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்.சி- எஸ்.டி பிரிவினருக்கு 35 லிருந்து 37 வயதாகவும் பிற பிரிவினருக்கு 30 இல் இருந்து 32 வயதாகவும் தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
11:06 AM, 1 Jun

ஆண்டு முழுவதும் ஸ்டெர்லைட் பிரச்னையை விவாதிக்கத் தயார்: ஜெயக்குமார்
ஸ்டெர்லைட்டுக்கு அனுமதியும் கொடுத்துவிட்டு நாடகமும் ஆடுகிறது திமுக : ஜெயக்குமார் பேட்டி
காவிரி, கச்சத்தீவு, முல்லைப்பெரியார் என தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்தது திமுக
மடியில் கனம் இருப்பதால்தான் திமுக சட்டசபைக்கு வர பயப்படுகிறது: ஜெயக்குமார்
10:03 AM, 1 Jun

வேல்முருகன் கைதைக் கண்டித்து தீக்குளித்தவர் மரணம்
கடலூரைச் சேர்ந்த ஜெகன் நேற்று தீக்குளிப்பு
தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெகன் மரணம்
10:03 AM, 1 Jun

தமிழக பாஜகவினர் மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகின்றனர்: முத்தரசன்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு விவாதிக்க வலியுறுத்தி திமுக சட்டசபையை புறக்கணித்தது சரியான முடிவு
வேல்முருகனை கைது செய்திருப்பது கருத்துரிமைக்கு எதிரானது: முத்தரசன்
10:02 AM, 1 Jun

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்புடன் பிரதமர் மோடி சந்திப்பு
சிங்கப்பூர் அதிபர் மாளிகையில் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
ஷாங்கரி லா உரையாடல் நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
10:02 AM, 1 Jun

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு ஐநா மனித உரிமை வல்லுநர்கள் கண்டனம்
மனித உரிமை, சுற்றுச்சூழலுக்காக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு என குற்றச்சாட்டு
READ MORE

English summary
Here are the Tamilnadu today Flash news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X