For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு ஐ.நா.சுற்றுச் சூழல் பிரிவு தலைவர் எரிக் சொல்ஹெய்ம் கண்டனம்

சுற்றுச்சூழலுக்காக போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கக் கூடாது என்று ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    துப்பாக்கிச் சூட்டுக்கு ஐ.நா.சுற்றுச் சூழல் பிரிவு தலைவர் கண்டனம்-வீடியோ

    டெல்லி: சுற்றுச்சூழலுக்காக போராடிய மக்கள் மீது தமிழக அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கக் கூடாது என்று ஐ.நா.வின் சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் எரிக் சோல்ஹைம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தின்போது பேரணி செல்ல முயன்றவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகிவிட்டனர்.

    UN representative condemns for Thoothukudi firing

    இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஐ.நா. சபையும் இந்த சம்பவம் நடந்திருக்கக் கூடாது என்கிறது. இதுகுறித்து டெல்லியில் நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு ஐ.நா.வின் சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் எரிக் சோல்ஹைம் அளித்த சிறப்பு பேட்டியில் கூறுகையில், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சுற்றுச்சூழலை காக்க போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கக் கூடாது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு முயல வேண்டும் என்றார் எரிக் சோல்ஹைம்.

    தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே 2002-ம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற நார்வே நாட்டின் சார்பில் அமைதித் தூதராக மிக முக்கிய பணியாற்றியவர் எரிக் சோல்ஹைம். பின்னர் நார்வே நாட்டின் அமைச்சராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Executive Director of United Nations Environment Programme Erick Solheim says that the Tamilnadu government would not have done firing on people who protest to protect Environment.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X