For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜீவ் வழக்கு போல.. 71 ஆண்டுகால காந்தி கொலை வழக்கிலும் விடை தெரியாத கேள்விகள் ஏராளம்!

Google Oneindia Tamil News

சென்னை; முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மட்டுமே ஏராளமான விடை தெரியாத மர்மங்கள் இருக்கின்றன என்பது அல்ல.. தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் படுகொலை வழக்கில் இன்னமும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் ஏராளமாக உள்ளன.

1948 மகாத்மா காந்தி கோட்சேவால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். கோட்சே சார்ந்திருந்த இந்து மகாசபைதான் இப்படுகொலைக்கு பொறுப்பு என அறிவிக்கப்பட்டது. விசாரணைகளுக்குப் பின்னர் கோட்சே தூக்கிலிடப்பட்டார் என்பதுடன் முடிந்துவிடவில்லை காந்தி கொலை வழக்கு.

Unanswered questions in Mahatma Gandhi Assassination Case
  • மகாத்மா காந்தி படுகொலையுடன் தொடர்புடைய இந்து மகாசபையின் தலைவர்கள் ஒருவர் கூட விசாரணைக்குட்படுத்தப்படவில்லை.
  • காந்தி படுகொலைக்குப் பின் 6 மாதங்களில் இந்து மகா சபையின் தலைவராக இருந்த நிர்மல் சந்த் சட்டர்ஜி கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
  • நாட்டின் முதலாவது நாடாளுமன்ற தேர்தலில் நிர்மல் சந்த் சட்டர்ஜி கம்யூனிஸ்டுகளின் ஆதரவுடன் எம்.பியானார்
  • நிர்மல் சந்த் சட்டர்ஜியின் உற்ற தோழராக இருந்தவர் முதுபெரும் இடதுசாரித் தலைவர் ஜோதிபாசு
  • சர்ச்சைக்குரிய நிர்மல் சந்த் சட்டர்ஜியின் மகன் தான் லோக்சபா முன்னாள் சபாநாயகரும் முதுபெரும் இடதுசாரித் தலைவருமான சோம்நாத் சட்டர்ஜி.
  • காங்கிரஸ் கட்சியில் புதிய அமைப்பை தோற்றுவிக்க காந்தி கடிதம் எழுதியதால் நேரு பதறிப் போனார் என்பதன் பின்னணி என்ன?
  • காந்தி சுடப்பட்டு அவரது உயிர் துடித்துக் கொண்டிருந்த போது அருகே இருந்த மருத்துவமனைகள் ஒன்றுக்குக் கூட அவரை எடுத்துச் செல்லாதது ஏன்?
  • தேசத்தின் தந்தையின் படுகொலைக்குப் பொறுப்பு ஏற்று அப்போதைய பிரதமர் நேரு ராஜினாமா செய்யாதது ஏன்?
  • இந்து மகாசபையின் மூத்த தலைவர்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜி(இவர்தான் இன்றைய பாஜகவுக்கு அடித்தளம் போட்டவர்) க்கு நேரு அமைச்சரவையில் இடம் கொடுத்தது ஏன்?

இப்படியான பட்டியல்கள் நீள்கிறது.

English summary
Here are the Unanswered questions in Mahatma Gandhi Assassination Case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X