For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிழல் உலக தாதா சோட்டா ராஜனும்.. விநாயகர் சதுர்த்தியும்: சர்ச்சை ஃபேஸ்புக் பக்கம்!!

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் நிதி உதவி மற்றும் வழிகாட்டுதலில் மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதாக வெளியான செய்திகள் குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பையைவிட்டு நிழல் உலக தாதாக்கள் தாவூத் இப்ராகிம், சோட்டா ராஜன் உள்ளிட்ட பலரும் தப்பி ஓடி வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து வருகின்றனர். இவர்களில் சோட்டா ராஜன் மலேசியாவுக்கு அருகே தீவுகள் ஒன்றில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

Underworld don Chhota Rajan takes to Facebook for Ganpati darshan

இந்த நிலையில் மும்பையில் எப்போதும் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.. அதன் விவரம்:

  • மும்பையில் விநாயகர் சதுர்த்தி காலத்தில் விநாயகர் சிலைகளை வைத்து பிரமாண்ட பந்தல்கள் அமைத்து பிரபலங்களை அழைத்து நாள்தோறும் வழிபாடு செய்வது வழக்கம்.
  • விநாயகர் சதுர்த்தி விழாக்களை நடத்துவதற்கான அமைப்புகள் "மண்டல்கள்" என்று அழைக்கப்படுகின்றன.
  • மும்பை, திலக் நகரில் உள்ள Sahyadri Krida Mandal என்ற விநாயகர் சதுர்த்தி விழாக் குழு கடந்த ஆண்டு முதல் ஃபேஸ்புக்கில் இணைந்துள்ளது.
  • நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள், பூனம் மகாஜன், யுவராஜ்சிங் என அத்தனை பிரபலங்களும் இந்த திலக் நகர் விநாயகரை வழிபட படையெடுத்து வருவதால் அனைவரும் உற்றுப் பார்க்கின்றனர்.
  • இதன் ஃபேஸ்புக் பக்கமானது Sahyadri Krida Mandal என்ற பெயருடன் இல்லாமல் Sahyadri Krida Mandal.R என்ற இன்ஷியல் சேர்ந்துள்ளது.
  • இந்த Sahyadri Krida Mandal.R என்ற இன்ஷியல் நிழல் உலக தாதா சோட்டா ராஜனைத்தான் குறிக்கிறது என்பது மும்பை ஊடகங்கள்.
  • தீவிர விநாயகர் பக்தரான சோட்டா ராஜன்தான் இந்த விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தமது அடியாட்கள் மூலம் நிதி உதவி செய்துள்ளாராம்.
  • அத்துடன் சோட்டா ராஜனின் ஆலோசனைப்படிதான் இந்த ஃபேஸ்புக் பக்கமும் தொடங்கப்பட்டதாகவும் அதனால்தான் 'R" என்ற இன்ஷியல் இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
  • இது குறித்து கருத்து தெரிவித்த மண்டல் பொறுப்பாளர் ராகுல், அனைத்து விழாக்குழுக்களைப் போலத்தான் நாங்களும் ஃபேஸ்புக்கில் இணைந்துள்ளோம்' என்றார்.
  • அதே நேரத்தில் ஏன் இன்ஷியல் R போடப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு மவுனத்தையே பதிலாக கொடுத்து அனுப்பியுள்ளார் நிர்வாகி ராகுல்.
English summary
Fugitive underworld don Chhota Rajan is said to be funding the Ganesh pandal organised by Sahyadri Krida Mandal in Tilak Nagar, Chembur, to dodge Mumbai Police. Rajan alias Rajendra Sadashiv Nikalje has sought the help of technology to seek Lord Ganesha’s blessings this year, say sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X