For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தப்பா பயன்படுத்துவாங்க.. ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவருக்கு சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்பு கடிதம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Europe moves resolution against CAA

    டெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்துள்ளதை கண்டித்துள்ள லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று ஐரோப்பிய நாடாளுமன்ற குழு தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 751 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 600 பேர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து உள்னனர்.

    154 உறுப்பினர்களை கொண்டுள்ள எல் அண்ட் டி(சமதர்மவாதிகள், ஜனநாயக கட்சி கூட்டணி), 182 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய மக்கள் கட்சி, 66 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய பழமைவாத மற்றும் சீர்திருத்த குழு, 41 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய ஐக்கிய இடதுசாரி குழுக்கள், 108 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய புதுப்பிப்பு குழு, 75 உறுப்பினர்களை கொண்ட கிரீன்ஸ் மற்றும் ஐரோப்பிய குழு ஆகிய ஆறு குழுக்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

    சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம்... பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிதி உதவி- அமலாக்கப் பிரிவு சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம்... பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிதி உதவி- அமலாக்கப் பிரிவு

     அச்சுறுத்துகிறது

    அச்சுறுத்துகிறது

    இந்த தீர்மானம் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஆறுகுழு உறுப்பினர்கள் கூறுகையில், இந்திய குடியுரிமை முறையில் இது அபாயகரமான மாற்றம், உலகிலேயே நாடில்லாமல் மக்கள் இந்தியாவில் அதிகரிப்பார்கள், சிஏஏவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு பதிலாக அவர்களை அச்சுறுத்துவதில் அரசுத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

     அகதிகளுக்கு குடியுரிமை

    அகதிகளுக்கு குடியுரிமை

    அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் கொள்கையில் இந்தியா மதம் என்ற பிரிவினை இணைத்துள்ளது. குடியரிமை திருத்த சட்டம் அதனால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் சர்வதேச அளவில் இந்தியாவின் கவுரவத்தையும், உள்நாட்டு நிலைத்தன்மையும் பாதிக்கலாம்" என்று உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

     வாக்கெடுப்பு

    வாக்கெடுப்பு

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தின் மீது நாளை விவாதம் நடத்தி நாளை மறுதினம் ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த தீர்மானம் ஐரோப்பிய ஒன்றித்தில் நிறைவேற்றப்பட்டால் அது மத்திய அரசுக்கும், இந்திய நாடாளுமன்றத்துக்கும், ஐரோப்பிய ஆணைய தலைவர்களுக்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்படும். இதனால் இந்தியாவுக்கு பொருளாதார தடைகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

     தவறான முன்னுதாரணம்

    தவறான முன்னுதாரணம்

    இந்நிலையில் ஆறு குழுக்கள் தீர்மானம் கொண்டு வந்த ஒரு நாள் கழித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தலைவருக்கு, இந்தியாவில் லோக்சபா சபாநாயகர் ஒம் பிர்லா கவலை தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார். அவர் தனது கடிதத்தில் இந்த தீர்மானம் ஒரு தவறான முன்னுதாரணமாக அமையும் என்று சுட்டிக்காட்டியுள்ளதுடன்,: "ஒரு நாடாளுமன்றம் இன்னொரு நாடாளுமன்றத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்குவது பொருத்தமற்றது, இது நிச்சயமாக உங்கள் நலன்களுக்கு எதிராகவும் நாளை தவறாக பயன்படுத்தப்படலாம்". என்று எச்சரித்துள்ளார்.

     மத துன்புறுத்தல்

    மத துன்புறுத்தல்

    குடியுரிமைச் சட்டம், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரிய ஆலோசனையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறிய சபாநாயகர் ஒம் பிர்லா, "எங்களின் அண்டை நாடுகளால் மத துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கு எளிதாக குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழங்குகிறது. இது யாரிடமிருந்தும் குடியுரிமையை பறிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை" என்றும் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

    English summary
    "It is inappropriate for a legislature to pass judgement on another" Lok Sabha Speaker To European Union Parliament On Anti-CAA Resolutions
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X