For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீர்... எங்க ஏரியா உள்ள வராதே... ஐ.நா. மனித உரிமை அமைப்புக்கு பா.ஜ.க எச்சரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் அதில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தலையிடுவதை ஏற்க முடியாது என்றும் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஷைனா தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருவதாக கடிதம் ஒன்றை பாகிஸ்தான் ஐ.நா. மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பி இருந்தது. இதனையடுத்து, ஆய்வு செய்ய காஷ்மீருக்கு வர விருப்பம் தெரிவித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் கடிதம் ஒன்றை இந்தியாவிற்கு அனுப்பி இருந்தது.

UNHRC intervention in Kashmir unacceptable: BJP

இதனை தொடர்ந்து, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விருப்பத்திற்கு பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஷைனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்ய விரும்பும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் நல்லெண்ணம் பாராட்டுக்குரியது என்று கூறிய ஷைனா, அதே நேரத்தில் காஷ்மீர் அவர்கள் தலையிடும் பகுதி அல்ல என்றும் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

English summary
Kashmir is Inida's internal matter and not an area of UNHRC intervention, spokesperson Shaina said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X