For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய பட்ஜெட் 2014-15: ஹைலைட்ஸ்

By Chakra
Google Oneindia Tamil News

-மத்திய பட்ஜெட்டில் ரூ7529 கோடிக்கு வரிகள் விதிப்பு

-வரிகள் குறைப்பால் டிவி, கம்ப்யூட்டர்கள், பிரிட்ஜுகள் விலை குறையும்

-காலணிகளுக்கான உற்பத்தி வரி 6 சதவிகிதமாக குறைப்பு

-வரி குறைப்பால் காலணிகள் விலை குறையும்

-சிகரெட் உட்பட புகையிலைப் பொருட்கள் மீதான வரி மிக கடுமையாக உயர்வு

-கடுமையான வரி உயர்வால் சிகரெட், பான்மசலா உள்ளிட்டவற்றின் விலை மிக கடுமையாக உயரும்

-எல்.சி.டி.. எல்.இ.டி. டிவிகள் மீதான இறக்குமதி வரி ரத்து

-இறக்குமதி வரி ரத்தால் எல்.சி.டி.. எல்.இ.டி. டிவிகள் விலை குறையும்

-2014-15ல் மொத்த செலவுகள் ரூ. 17,94 லட்சம் கோடியாக இருக்கும்

-மொத்த வருவாய் ரூ. 13.64 கோடியாக இருக்கும்

-ஒட்டுமொத்த பற்றாக்குறை 4.5 சதவீதமாக இருக்கும்

-வருவாய் பற்றாக்குறை 2.5 சதவீதமாக இருக்கும்

-நேரடி வரிகள் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய திட்டம்

-கம்ப்யூட்டர், சோப், எல்.இ.டி., எல்.சி.டி விலைகள் குறைகிறது

-டிவிகளில் பயன்படுத்தப்படும் பிக்சர் டியூப்புக்கு சுங்க வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிப்பு

-கச்சா பாமாயில் எண்ணெய் மீதான இறக்குமதி வரி ரத்து

-சோப்பு தயாரிப்புக்கான உற்பத்தி வரி குறைப்பு

-புதிய மின் திட்டங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வரி இல்லை

Union Budget 2014-15

-கல்விக்கான வரிவிதிப்பில் மாற்றம் எதுவும் இல்லை

-வீட்டு கடனுக்கான வரிச் சலுகை ரூ1.5 லட்சத்தில் இருந்து ரூ2 லட்சமாக உயர்வு

-ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கான வட்டிக்கு வரி விலக்கு

-இதுவரை இது 1.5 லட்சமாக இருந்தது.

-வீட்டுக் கடன் வாங்குவோருக்கு உதவும் திட்டம் இது

-வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 2.5 லட்சமாக உயர்வு

-பிஎப் திட்டத்தில் செலுத்தும் பணத்துக்கு ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு

-முன்பு இது ரூ. 1 லட்சமாக இருந்தது

-மாத ஊதியதாரர்களுக்கு ஜேட்லி தந்த இன்ப அதிர்ச்சி

-வருமான வரி விலக்கு உச்ச வரம்பும் பிஎப் சேமிப்பு வரி விலக்கும் மாத ஊதியதாரர்களுக்கு உதவும்

-முதியோருக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ3 லட்சமாக உயர்வு

-15,000 கி.மீ. தூரத்துக்கு தனியாருடன் இணைந்து எரிவாயு குழாய்கள் அமைக்கப்படும்

- வட கிழக்கு மாநிலங்களுக்கு என அருண் பிரபா என்ற தனி 24/7 மணி நேர டிவி சேனல்

-ஆசிய, காமன்வெல்த் போட்டிகளுக்கு பயிற்சி தர ரூ100 கோடி ஒதுக்கீடு

-புதுச்சேரிக்கு பேரிடர் நிதி உதவியாக ரூ188 கோடி ஒதுக்கீடு

-குத்துச் சண்டை, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் விளையாட்டுகளுக்கு புதிய பயிற்சி மையங்கள்

-டெல்லி மின்துறை மறுசீரமைப்புக்கு ரூ200 கோடி

- கங்கை சீரமைப்புக்கு என்ஆர்ஐக்கள் உதவும் வகையில் புதிய நிதியம் உருவாக்கப்படும்

-வடகிழக்கு மாநிலங்களுக்கான "அருண் பிரபா" என்ற பெயரில் தனி தொலைக்காட்சி

-காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்தோர் மேம்பாட்டுக்கு ரூ500 கோடி ஒதுக்கீடு

English summary
Union Budget 2014-15 மத்திய பட்ஜெட் 2014-15 Live
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X