For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய பட்ஜெட்: சேவை வரியை அறிமுகபடுத்தி, இறக்குமதி வரியை குறைத்தவர் யார் தெரியுமா?

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2014-2015ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை துவங்கி நடந்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து புதன்கிழமை பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.

இதையடுத்து அவர் 2014-2015ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இந்நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து சில தகவல்களை தெரிந்து கொள்வோம்.

84து

84து

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை 83 மத்திய பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று நாட்டின் 84வது மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய பட்ஜெட்

மத்திய பட்ஜெட்

வருடாந்திர நிதி அறிக்கை தான் மத்திய பட்ஜெட் என்று அழைக்கப்படுகிறது. ஏப்ரல் 1ம் தேதி துவங்கி மார்ச் 31ம் தேதி வரையிலான நிதியாண்டில் அரசின் நிதி நிலையை கணக்கிடுவது தான் மத்திய பட்ஜெட் ஆகும்.

பிப்ரவரி

பிப்ரவரி

மத்திய பட்ஜெட் பொதுவாக பிப்ரவரி மாதம் கடைசி வேலை நாள் அன்று தாக்கல் செய்யப்படும். ஆனால் தேர்தல் நேரமாக இருந்தால் புதிய அரசு பதவியேற்கும் வரை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

அச்சகம்

அச்சகம்

பட்ஜெட் குறித்த தகவல்கள் நிதி அமைச்சகத்திற்கு சொந்தமான அச்சகத்தில் தான் அச்சிடப்படும்.

சண்முகம்

சண்முகம்

முதலாவது மத்திய பட்ஜெட் 1949ம் ஆண்டு ஆர்.கே. ஷண்முகத்தால் தாக்கல் செய்யப்பட்டது.

மன்மோகன் சிங்

மன்மோகன் சிங்

சேவை வரியை மன்மோகன் சிங் கடந்த 1994ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தினார்.

கருப்பு பட்ஜெட்

கருப்பு பட்ஜெட்

1973-1974ம் ஆண்டுக்கான் மத்திய பட்ஜெட் கருப்பு பட்ஜெட் எனப்படுகிறது. காரணம் அந்த ஆண்டு பட்ஜெட் பற்றாக்குறை மட்டும் ரூ. 550 கோடி ஆகும்.

இறக்குமதி வரி

இறக்குமதி வரி

1991-92ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த அப்போதைய நிதி அமைச்சர் மன்மோகன் சிங் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்ததுடன் 300க்கும் மேற்பட்ட சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 50 சதவீதமாக குறைத்தார்.

2000

2000

2000ம் ஆண்டு வரை பிப்ரவரி மாதம் கடைசி வேலை நாளில் மாலை 5 மணிக்கு தான் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2001ம் ஆண்டு யஷ்வந்த் சின்ஹா காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார்.

இந்தி

இந்தி

1955-56ம் ஆண்டில் தான் முதன்முதலாக பட்ஜெட் பேப்பர்கள் இந்தியில் தயார் செய்யப்பட்டன.

சிதம்பரம்

சிதம்பரம்

பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம், ஒய்.பி. சவான் மற்றும் சி.டி.தேஷ்முக் ஆகியோர் தலா 7 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். மேலும் மன்மோகன் சிங்கும், டிடி கிருஷ்ணமாச்சாரியும் தலா 6 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்.

English summary
Modi government has presented its maiden union budget today. We are presenting some interesting facts about the Union Budget.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X