For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பட்ஜெட் 2020: மேக் இன் இந்தியாவுக்கு முக்கியத்துவம்- இறக்குமதி பொருட்கள் மீது கூடுதல் வரி?

Google Oneindia Tamil News

Recommended Video

    Union Budget 2020 | Make in India | Imported items may get costlier

    டெல்லி: மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை வலிமைப்படுத்தும் வகையில் இறக்குமதி செய்யப்படும் காலனிகள், பொம்மைகள் உள்ளிட்டவைகள் மீது மத்திய பட்ஜெட்டில் கூடுதல் வரிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பொருளாதார தேக்கநிலையை மிக மோசமாக நாடு எதிர்கொண்டிருக்கிறது. இதனை சரி செய்யும் வகையில் மத்திய பட்ஜெட்டில் என்ன மாதிரியான அறிவிப்புகள் வெளியாகும்? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    Union Budget 2020: Imported footwear, toys may get costlier

    மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டம் கடுமையான விமர்சனதை எதிர்கொண்டிருக்கிறது. இத்திட்டம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.

    இதனை சமாளிக்கும் வகையில் பிப்ரவரி 1-ல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் மேக் இன் இந்தியா திட்டத்தை வலிமையாக்கும் அம்சங்கள் இடம்பெறக் கூடும். இதன் ஒருபகுதியாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காலனிகள், பேப்பர், ரப்பர் பொருட்கள், பொம்மைகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படலாம்.

    பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்.1-ல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்.1-ல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

    சில ரப்பர் டயர்களின் மீது தற்போது 10% முதல் 15% வரி விதிக்கப்படுகிறது. இதனை 40% ஆக உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். அதேபோல் காலனிகள் மற்றும் அதுசார்ந்த பொருட்கள் மீது தற்போது 25% வரி விதிக்கப்படுகிறது. இதனை 35% உயர்த்தும் அறிவிப்பும் வெளியாகலாமாம்.

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மரச்சாமான்கள் மீதான தற்போதைய 20% வரியானது 30% ஆக உயர்த்தப்படலாம். வெளிநாட்டு பேப்பர்கள் மீதான இறக்குமதி வரியும் கூட 20%-ல் இருந்து 40% ஆக அதிகரிக்கக் கூடும் என்கின்றன தகவல்கள்.

    English summary
    Sources said that Centre may increase the tax on the imported footwear, toys in Union Budget 2020.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X