For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியப் பெண்களை வெளிநாட்டினர் வாடகைத் தாயாக பயன்படுத்த தடை- மசோதாவுக்கு கேபினட் ஒப்புதல்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியப் பெண்களை வெளிநாட்டினர் வாடகைத் தாயாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் வாடகைத் தாய் - புதிய சட்ட வரைவு மசோதாவை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஆனால், மசோதா இறுதி வடிவம் பெறாததால் கைவிடப்பட்டது.

Union Cabinet approves draft Surrogacy Bill

இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, வணிகவரித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ராட் கவுர் பாதல் ஆகியோரை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் வாடகைத் தாய் சட்ட மசோதா- 2016க்கு இறுதி வடிவம் கொடுத்தனர்.

தற்போது, இந்த வரைவு மசோவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இச்சட்டத்தின் மூலம் வெளிநாட்டவர் சுற்றுலா விசாவில் வந்து இந்தியப் பெண்களை வாடகைத் தாயாக பயன்படுத்தி குழந்தை பெற்றுக் கொள்வது தடை செய்யப்படும்.

அத்துடன் வாடகைத் தாய் மூலமாக நடைபெறும் குழந்தைப் பேறுகள் சட்டபூர்வமாக, வெளிப்படைத் தன்மை உடையதாக மாற்றப்படும்.

English summary
Union Cabinet on Wednesday approved the Surrogacy Regulation bill, 2016, which aims to regulate surrogacy and safeguard the rights of surrogate mothers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X