For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேட்டுச்சா சீனா? பாரத் மாதா கீ ஜே... ராஜ்நாத்சிங் பயணத்தில் உரத்து முழங்கிய கிழக்கு எல்லை வீரர்கள்!

Google Oneindia Tamil News

சுக்னா: நாட்டின் கிழக்கில் சிக்கிம் எல்லைப் பகுதியில் ராணுவ நிலைகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சனிக்கிழமையன்று ஆய்வு செய்தார். மேலும் 2-வது நாளாக இன்று ஞாயிற்றுக்கிழமையும் கிழக்கு எல்லைப் பகுதிகளில் ராஜ்நாத்சிங் ஆய்வை தொடர்ந்து மேற்கொள்கிறார்.

Recommended Video

    Rajnath Singh பயணத்தின் போது எல்லையில் முழக்கமிட்ட ராணுவ வீரர்கள் | Oneindia Tamil

    மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு 2 நாட்கள் பயணமாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சனிக்கிழமை சென்றார். சீனாவுடனான எல்லைப் பகுதியை பாதுகாத்து வரும் டார்ஜிலிங் அருகே உள்ள சுக்னா ராணுவ முகாம் ராணுவ வீரர்களுடன் நடைபெற்ற தசார கொண்டாட்டங்களில் ராஜ்நாத்சிங் பங்கேற்றார்.

    ராஜ்நாத்சிங், நரவனே ஆய்வு

    ராஜ்நாத்சிங், நரவனே ஆய்வு

    இந்தியாவின் கிழக்கு எல்லையில் சுக்னா ராணுவ முகாம் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. வடக்கே காஷ்மீரில் சீனா தொடர்ச்சியான ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் கிழக்கு எல்லையில் ராஜ்நாத்சிங் பயணம் மேற்கொண்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ராஜ்நாத்சிங்குடன் ராணுவ தளபதி நரவனேவும் அந்தப் பகுதியில் ஆய்வு நடத்தினார்.

    இந்தியாவின் நோக்கம்

    சுக்னா ராணுவ முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் பேசியதாவது: அண்டை நாடுகளுடன் இந்தியா எப்போதும் நல்லுறவையே விரும்புகிறது. அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்க்கவும் இந்தியா முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

    20 ராணுவ வீரர்கள் தியாகம்

    20 ராணுவ வீரர்கள் தியாகம்

    ஆனால் எல்லையில் நமது நாட்டைப் பாதுகாக்க நமது ராணுவ வீரர்கள் காலந்தோறும் தியாகம் செய்து வருகின்றனர். கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் நமது 20 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் தியாகங்கள் நிச்சயம் வீண்போகாது.

    தியாகத்தால் தேசம் பெருமிதம்

    தியாகத்தால் தேசம் பெருமிதம்

    உங்களைப் போன்ற தீரம் கொண்ட வீரர்களால்தான் நமது தேசத்தின் எல்லைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உங்களின் தியாகங்களை எண்ணி ஒட்டுமொத்த இந்திய தேசமும் பெருமிதம் கொள்கிறது. இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ராணுவ வீரர்களுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் பாரத் மாதா கீ ஜே என முழங்கிய முழக்கம் சீனா ராணுவத்தினரை அதிரவைத்திருக்கும்.

    சீனா ஆட்சேபனை வரும்

    சீனா ஆட்சேபனை வரும்

    பொதுவாக எல்லைப் பகுதிகளில் மத்திய அமைச்சர்கள் யார் பார்வையிட்டாலும் அதற்கு சீனா ஆட்சேபனை தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. தற்போதைய ராஜ்நாத்சிங்கின் பயணத்துக்கும் சீனா ஆட்சேபனை தெரிவிக்கவே செய்யும். இருந்தபோதும் அதை பற்றி கவலைப்படாமல் எல்லை காக்கும் வீரர்களை உற்சாகப்படுத்தவும் நமது ராணுவத்தினரின் தயார்நிலையை ஆய்வு செய்யவும் ராஜ்நாத்சிங் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    English summary
    Union Defence Minister Rajnath Singh reviewed the situation and preparedness in the Eastern Sector at the Headquarters of 33 Corps in Sukna.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X