For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7-வது ஊதிய கமிஷன் பரிந்துரை... கூடுதல் செலவை நினைத்து கையைப் பிசையும் மத்திய நிதி அமைச்சகம்

Google Oneindia Tamil News

டெல்லி : 7- வது ஊதிய கமிஷனை பரிந்துரை செய்தால் அடுத்த நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக ரூ .1 லட்சம் கோடிக்கும் மேல் செலவு பிடிக்கும் என மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரைக்கப்பட்டு 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் அமல்படுத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

arun jaitly

இதன்படி 2016-2017- ஆம் நிதியாண்டில் இது நடைமுறைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக நேற்று நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியதாவது...

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய விகிதம், நடப்பு நிதியாண்டில் ரூ. 1 லட்சத்து 619 கோடி செலவாகிறது. 7- வது ஊதிய கமிஷன் பரிந்துரையின் , 2016-17-ம் நிதியாண்டில் 16.79 சதவீதம் அதிகரித்து ரூ. 1.16 லட்சம் கோடியாகவும், 2017-18 ம் நிதியாண்டில் ரூ. 1.28 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும்.

அதே போன்று நடப்பாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் ஒய்வூதியதாரர்களுக்கான செலவு ரூ. 88,521 கோடியாகும். இது 7-வது ஊதியக் கமிஷன் பரிந்துரையின்படி 2016-17-ம் நிதியாண்டில் ரூ.1.02 லட்சம் கோடியாகவும், 2017-18-ம் நிதியாண்டில் ரூ. 1.12 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும்.
இவ்வாறு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லீ கூறினார்.

7 வது ஊதியக் கமிஷனின் பரிந்துரைகள் எப்போது அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

English summary
The finance ministry is apprehensive about the recommendations of the Seventh Pay Commission, expected this month, significantly increasing the revenue expenditure of the government in the next fiscal, leaving it less money to spend on building capital assets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X