For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருப்பு பணத்தை தாமாக முன்வந்து தெரிவிக்க மார்ச் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு - மத்திய அரசு

கணக்கில் வராத பணத்தை வைத்திருப்போர் தாமாக முன்வந்து தகவல் தெரிவிக்க மார்ச் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: கருப்பு பணம் வைத்திருப்போர் தாமாக முன்வந்து அரசிடம் தெரிவிக்க மார்ச் 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கணக்கில் காட்டப்படாத பணம் வைத்திருப்போர் தாமாக முன்வந்து விவரங்களை தெரிவிக்க மத்திய அரசு கால அவகாசம் அளித்திருந்தது. அந்த அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது புதிய காலக்கெடுவை மத்திய அரசு அறிவித்துள்ளது.

 union government Announces Yet Another Scheme For Black Money

இதுகுறித்து மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா கூறுகையில், கணக்கில் காட்டப்படாத வருமானத்தை தாமாக முன்வந்து மார்ச் 31ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். அரசுக்கு வருமானவரி செலுத்தாமல் பணத்தை பதுக்கியவர்களின் விவரத்தையும் தெரிவிக்கலாம்.

கறுப்புப்பண மாற்றம் குறித்த தகவலை [email protected] என்ற மின்னஞ்சலிலும் தகவல் அளிக்கலாம். தகவல் தெரிவிக்கப்படும் நபரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும். கணக்கில் காட்டப்படும் பணத்திற்கு 50 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும். மேலும் அபராத வரி செலுத்தினால் நடவடிக்கை இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Revenue Secretary Hasmukh Adhia also announced the launch of a tax disclosure scheme which would open on Saturday and close on March 31
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X