For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆமா, அதிமுக எங்களை ஆதரித்தது.. மத்திய அமைச்சர் அனந்த்குமார்

Google Oneindia Tamil News

Recommended Video

    நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக- வீடியோ

    டெல்லி: பாஜக அரசுக்கு ஆதரவாக லோக்சபாவில் நேற்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து அதிமுக வாக்களித்தது என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த்குமார் கூறியுள்ளார்.

    முன்னதாக அதிமுகவின் முடிவு தெளிவாகத் தெரியாமல் இருந்தது. அது வெளிநடப்பு செய்யுமா அல்லது எதிர்த்து வாக்களிக்குமா அல்லது ஆதரித்து வாக்களிக்குமா என்ற குழப்பம் இருந்து வந்தது.

    Union minister Ananth Kumar says ADMK supported BJP

    அதேசமயம், தமிழகத்தில் களை கட்டியிருந்த வருமான வரி ரெய்டுகளை வைத்து நிச்சயம் எதிர்த்துதான் வாக்களிக்கும் என்றும் சிலர் கூறி வந்தனர். இந்த நிலையில் அதிமுக கொடுத்த ஆதரவால்தான் நேற்று மோடி அரசு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெல்ல முடிந்தது.

    இதுகுறித்து அமைச்சர் அனந்த்குமார் கூறுகையில், நாங்கள் ஏற்கனவே சொன்னது போல தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெளியிலிருந்தும் ஆதரவு கிடைத்தது. அதிமுக ஆதரவு தெரிவித்தது. பிஜூ ஜனதாதளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகியவை வெளிநடப்பு செய்தன என்று கூறினார்.

    இதன் மூலம் இந்த 3 கட்சிகளும் பாஜகவுக்கு ஆதரவாக நடந்து கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.

    English summary
    The AIADMK supported the government and voted against the no-confidence motion, Parliamentary Affairs Minister Ananth Kumar said. Talking to reporters after the vote, Kumar said the no-confidence motion was defeated by a decisive margin. "As I told you, we got support from parties outside the NDA. The AIADMK supported us. BJD and the TRS walked out," he said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X