For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து ராஜ்நாத் சிங் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அவசர ஆலோசனை!

காஷ்மீரில் பாஜக கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: காஷ்மீரில் பாஜக கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

காஷ்மீரில் ரம்ஜானையொட்டி தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டை நிறுத்தி வைக்கப்பட்டது. ரம்ஜான் முடிவடைந்ததால் சண்டை நிறுத்தத்தை மத்திய அரசு விலக்கிக் கொண்டது.

சண்டை நிறுத்தத்தை தொடருமாறு மெஹபூபா முப்தி வலியுறுத்தினார். சண்டை நிறுத்தப் பிரச்சனையால் ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.

ஆதரவை விலக்கிய பாஜக

ஆதரவை விலக்கிய பாஜக

மத்திய அரசு முடிவை மெஹபூபா ஏற்காததால் பா.ஜ.க. தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. இதைத்தொடர்ந்து காஷ்மீர் முதல்வர் பதவியை மெஹபூபா முப்தி ராஜினாமா செய்துள்ளார்.

கூட்டணி ஆட்சி முடிவு

கூட்டணி ஆட்சி முடிவு

ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு மெஹபூபா முப்தி அனுப்பி வைத்துள்ளார். இதனால் காஷ்மீரில் பாஜக - பிடிபி கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

அஜித் தோவல் பங்கேற்பு

அஜித் தோவல் பங்கேற்பு

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றுள்ளார்.

உளவுத்துறை அதிகாரி

உளவுத்துறை அதிகாரி

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை செயலர், இணைச் செயலர் மற்றும் உளவுத்துறை அதிகாரி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

English summary
union Minister Rajnath Singh conducts emergency meeting in Delhi. National Security Advisor Ajith Thoval also has participated in the meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X