For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய உச்சநீதிமன்றத்தின் இணையதளமும் காலி.. வேலையை காட்டிய பிரேசில் ஹேக்கர்கள்!

இந்திய உச்சநீதிமன்றத்தின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய உச்சநீதிமன்றத்தின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 1 மணி நேரமாக இந்த தளம் வேலை செய்யவில்லை.

சரியாக ஒரு மணிநேரத்திற்கு முன்பு இந்திய உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ''சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்தியா'' ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது. பிரேசிலை சேர்ந்த மர்ம நபர்களால் இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

Unknown Brazil group hacked India Supreme Courts Official website

இந்த நிலையில் ஹேக் செய்யப்பட்டதால் உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தை பாதுகாப்புத்துறை முடக்கியது. அந்த இணையதளத்தில் பச்சை நிறத்தில் செடி இலைகள் வைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் பிரெஞ்சில் சில வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்புதான் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளமும் ஹேக் செய்யப்பட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சகத்தை ஹேக் செய்தது சீனாவை சேர்ந்த ஹேக்கர்கள் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த இரண்டு சம்பவங்களுக்கும் யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

English summary
Unknown Brazil group hacked India Supreme Court's Official website. Few days ago China group hacked Indian Defence ministry website.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X