சாமியார் கனவு பொய்யானது.... உ.பி கோட்டையில் தங்கப்புதையல் எதுவுமில்லை!'
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் உன்னாவோ நகரத்தில் இருக்கும் பழமையான கோட்டை தங்கப் புதையல் தேடுதல் வேட்டை முடிவடைந்துவிட்டதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இத்தனை நாளாக தேடியும் ஒருகிராம் தங்கத்தை கூட அவர்கள் கண்டுபிடிக்கவில்லை.
ஆங்கிலேயர் இந்தியாவில் ஆட்சி செய்தபோது, உத்தரபிரதேசத்தில் உன்னாவ் மாவட்டம் அமைந்துள்ள பகுதியில், குறுநில மன்னராக இருந்தவர் ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங்.

இவர் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு 1857-ம் ஆண்டு வீர மரணம் அடைந்தார். இவர் தாண்டியா கெராவில் உள்ள தனது கோட்டையில் 1,000 டன் தங்கத்தை புதைத்து வைத்துள்ளதாகவும், இத்தகவலை மன்னர் தன் கனவில் வந்து தெரிவித்ததாகவும் மத்திய அமைச்சர் சரண் தாஸ் மஹந்திடம் ஷோபன் சர்க்கார் என்ற துறவி கூறினார்.
இதன் அடிப்படையில், அக்கோட்டையை தோண்டி பார்க்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி மத்திய அரசின், தொல்பொருள் ஆய்வு துறையினர், கடந்த 18 ஆம் தேதி முதல் கோட்டையை தோண்ட துவங்கினர்.
யாரோ ஒருவர் கனவு கண்டு கூறியதை நம்பி மத்திய அரசு இவ்வாறு புதையல் தோண்டுவது கேலிக்குரியது என பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், உன்னாவோ கோட்டையில் இத்தனை நாட்களும் அகழாய்வு செய்ததில், அங்கு தங்கப்புதையல் எதுவுமில்லை என தெரியவந்துள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications