For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1,000 டன் தங்கப் புதையல்.. 2வது நாளாக தோண்டும் பணி

By Mathi
Google Oneindia Tamil News

உன்னாவ்: உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 1,000 டன் தங்கப் புதையல் இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் 2வது நாளாக தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

உன்னாவ் அருகே கெடா எனும் கிராமத்தில் மன்னர் ராஜா ராவ் ராம் பாக் சிங் என்பவரது சிதிலமடைந்த கோட்டை உள்ளது. இவர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தூக்கிலிடப்பட்டார்.

இந்த கிராமத்தைச் சேர்ந்த சோபன் சர்க்கார் என்பவர் கனவில் மன்னர் தோன்றி, தமது கோட்டையில் 1,000 டன் புதையல் இருப்பதாக தெரிவித்தாராம். இதைத் தொடர்ந்து நேற்று கோட்டையில் புதையலைத் தோண்டும் பணி தொடங்கியது.

இன்றும் அந்த கோட்டையில் 2வது நாளாக புதையலைத் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் புதையலுக்கான அறிகுறி இருப்பதாக தென்படவில்லை என்று கூறப்படுகிறது.

Unnao gold hunt Day 2: ASI continues excavation

இதனிடையே எந்த ஒரு புதையலையும் தோண்டி எடுப்பதற்கு அறிவியல் பூர்வமான லாஜிக் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் அப்படி ஏதும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் விமர்சித்திருக்கிறார்.

English summary
The Archaeological Survey of India (ASI) on Saturday continued to dig for a treasure of 1,000 tonnes of gold supposed to be buried under the ruins of a 19th century fort on the basis of a seer's dream.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X