For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவால்களை புன்னகையுடன் தோளில் சுமக்கும் ஏரோ இந்தியா குழு!

Google Oneindia Tamil News

பெங்களூரு: 10வது பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கருத்தரங்கின் நிறைவு விழாவையொட்டி, விமான சாகச நிகழ்ச்சிகள் மற்றும் இந்திய விமானப் படை கண்காட்சி பெங்களூருவில் இன்று தொடங்கியுள்ளது.

ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) சார்பில் பெங்களூருவில் உள்ள நிம்ஹான்ஸ் கன்வென்ஷன் அரங்கில் நடைபெற்று வரும் பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கருத்தரங்கம் இன்று நிறைவடைகிறது. இந்த ஆண்டு கருத்தரங்கை நடத்தும் வான்வழி ஒழுங்குமுறை மையம், இந்திய விமானப் படைக்கு வான்வழி எச்சரிக்கைகள் மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளை கவனித்து வருகிறது.

Unsung heroes: Aero India Seminar team takes challenges with a smile

வான்வழி ஒழுங்குமுறை மையம், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு ஒரு குழுவை அமைத்துள்ளது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் கடந்த மாதம் நீக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலையில், பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டிய நிலையில் ஏற்பட்டது.

இதனால் வான்வழி ஒழுங்குமுறை மையத்தின் தலைவராக பொறுப்பு வகிக்கும் விஞ்ஞானி டாக்டர். கிறிஸ்டோபருக்கு கடந்த ஒரு மாதம் முழுவதும் பெரும் சவாலானதாகவே அமைந்தது. " கருத்தரங்கை நடத்துவதைவிட, வான்வழி எச்சரிக்கைகள் மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளை செய்வது மிகவும் எளிதாக இருக்கிறது" என ஒன் இந்தியாவிடம் பேசிய கிறிஸ்டோபர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, " இந்த ஆண்டு நிறைய பேர் கருத்தரங்கில் பங்கேற்றனர். இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தின் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கருத்தரங்கில் பேசிய பலர் தெரிவித்தனர். இம்முறை அதிகபடியான இளைஞர்கள் கருத்தரங்கில் பங்கேற்று, தங்களுடைய ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளனர். என்னை பொருத்தவரை, இந்த ஆண்டு கருந்தரங்கில் இளைஞர்கள் தெரிவித்த கருத்துக்கள் வரவேற்கத்தக்கது.

Unsung heroes: Aero India Seminar team takes challenges with a smile

விஞ்ஞானி சுமா வர்கீஸ் கூறும்போது, " கருத்தரங்கின் இரண்டாவது நாள் , அரங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியிருந்ததால், இந்த ஆண்டு பெரும் சவாலாகவே அமைந்தது. அமைப்பாளர்கள் குழுவில் 25 உறுப்பினர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். இதனால் பல நாட்கள் உறங்கக் கூட முடியவில்லை.

ஒருவருக்கு ஒரு பொறுப்பு வழங்கப்பட்டால் அதை நிறைவேற்றுவதிலே தான் குறியாக இருக்க வேண்டும். அது கழிவறையை சுத்தம் செய்வதாகட்டும் அல்லது ஒரு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதாகட்டும். அதைநோக்கியே நாம் செயல்பட வேண்டும்.

விஞ்ஞானி ரீனா சர்மா கூறும்போது, " கருத்தரங்கில் பேசியவர்களின் எண்ணங்களும், பார்வையும் மிகவும் ஆச்சரியப்பட வைத்தன. நமது நாட்டின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

விஞ்ஞானி சந்திரசேகரன் கூறும்போது, " இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் மக்களின் மனங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது" எனத் தெரிவித்தார்.

English summary
The 10th Aero India 2015 International Seminar (Aerospace: Vision 2050) will conclude in Bengaluru today paving way for the air show and exhibition activities to go live at Air Force Station Yelahanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X