For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நமாஸ், ஹோலி: உ.பி. முதல்வரின் சர்ச்சை பேச்சு: குவியும் கண்டனங்கள்

நமாஸ் குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

லக்னோ: நமாஸ் குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த கருத்தால் கண்டனங்கள் குவிகின்றன.

பூல்பூர் பேரவை தொகுதி இடைத்தேர்தலையொட்டி அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் பேசுகையில், இந்த ஆண்டு ஹோலி பண்டிகை வெள்ளிக்கிழமையில் வந்துவிட்டது.

UP CM sparks row by degrading Namaz

இந்த கிழமையில் முஸ்லீம்கள் தொழுகை செய்யும் நாள் ஆகும். ஆனால் ஆண்டுக்கு 52 வெள்ளிக்கிழமைகள் வருகிறது. ஆனால் ஒரு ஹோலிதான் வருகிறது. அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று நான் கூறியிருந்தேன்.

என் பேச்சை கேட்டு நமாஸ் தொழுகை விவகாரங்களை மாற்றி கொண்டு ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். நாடு முழுவதும் பாஜக ஆட்சி அமைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று முதல்வர் கூறினார்.

ஹோலி பண்டிகைக்காக நமாஸை முதல்வர் குறைத்து மதிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனங்கள் குவிகின்றன.

மேலும் ஹோலி பண்டிகை அன்று நமாஸ் செல்வோர் மீது கலர் பொடிகளை தூவுவதால் பிரச்சினைகள் ஏற்படும் என்பதாலும் நமாஸை ஒரு மணி நேரத்துக்கு ஒத்தி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

English summary
UP Chief Minister Yogi Adityanath said that he really appreciated that the Namaz timings were changed on Holi. It sparks row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X