For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நோட் பேன், மீட் பேன், மேரேஜ் பேன்.. மோடிக்கு தீவிரமாக "டஃப்" கொடுக்கும் யோகி!

உத்தர பிரதேசத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் மூன்று மாதங்களுக்கு திருமண ம் நடத்த விதிக்கப்பட்ட தடை பெரிய எதிர்ப்புகளை சந்தித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பல அதிரடி தடை உத்தரவுகள்... மோடிக்கே டஃப் கொடுக்கும் யோகி!- வீடியோ

    லக்னோ: உத்தர பிரதேசத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் மூன்று மாதங்களுக்கு திருமணம் நடத்த விதிக்கப்பட்ட தடை பெரிய எதிர்ப்புகளை சந்தித்து இருக்கிறது.

    பாஜக ஆளும் மாநிலங்களில் நிறைய விஷயங்களுக்கு மாற்றி மாற்றி தடை விதித்து வருகிறார்கள். இஸ்லாமிய பெயர்கள் கொண்ட ஊர்களே இருக்க கூடாது என்று போட்டி போட்டு பெயர்களை மாற்றி வருகிறார்கள்.

    இதில் பாஜக தலைவர்களுக்கு இடையிலேயே பெரிய போட்டி நிலவுகிறது. இந்த நிலையில்தான் உத்தர பிரதேசத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் மூன்று மாதங்களுக்கு திருமணம் செய்ய அம்மாநில முதல்வர் தடை விதித்துள்ளார்.

    நீங்க குழந்தை திருமணம் பண்ணுங்க.. பாஜக பாதுகாப்பு தரும்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி வாக்குறுதி! நீங்க குழந்தை திருமணம் பண்ணுங்க.. பாஜக பாதுகாப்பு தரும்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி வாக்குறுதி!

    நோட் பேன்

    நோட் பேன்

    நோட் பேன் (note ban)என்று அழைக்கப்படும் பணமதிப்பு நீக்கம் காரணமாக மக்கள் பெரிய அளவில் கஷ்டப்பட்டது எல்லோருக்கும் தெரியும். சுதந்திர இந்தியாவில் பிரதமர் ஒருவர் கொண்டு வந்த திட்டம் ஒன்றின் காரணமாக இவ்வளவு பெரிய கஷ்டம் ஏற்பட்டது அதுவே முதல்முறையாகும்.

    மீட் பேன்

    மீட் பேன்

    நோட் பேனை தொடர்ந்து மீட் பேன் (meat ban) கொண்டு வரப்பட்டது. இதனால் பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் பீப் எனப்படும் மாட்டுக்கறி தடை செய்யப்பட்டது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேரேஜ் பேன்

    மேரேஜ் பேன்

    இதோ இப்போது யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேசத்தில் மேரேஜ் பேன் (marriage ban) கொண்டு வந்து இருக்கிறார். அலகாபாத் (இப்போது பிரயாக்ராஜ்) முழுக்க அடுத்த மூன்று மாதங்களுக்கு திருமணமே நடத்த கூடாது என்று சட்டம் போட்டு இருக்கிறார். அதையும் மீறி நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.

    காரணம் என்ன

    காரணம் என்ன

    ஜனவரியில் உத்தர பிரதேசத்தில் கும்பமேளா விழா நடக்கிறது. இது எப்போதும் மிகப்பெரிய அளவில் நடப்பது வழக்கம். இதற்கு நாடு முழுவதிலும் இந்து சாமியார்களும், குருக்களும், அகோரிகளும் வருவது வழக்கம். இதில் 2 லட்சம் பேர் வரை சாமியார்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்த விழா பாதிக்க கூடாது என்று திருமணத்தை தடை செய்துள்ளார் யோகி ஆதித்யநாத்.

    போட்டியோ போட்டி

    போட்டியோ போட்டி

    பிரதமர் மோடியுடன் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மறைமுகமாக போட்டியிட்டு வருவது எல்லோருக்கும் தெரியும். சர்தார் சிலைக்கு பதிலாக ராமர் சிலை என்று தொடங்கி தற்போது நோட் பேனுக்கு போட்டியாக மேரேஜ் பேன் கொண்டு வந்து இருக்கிறார். எப்படியோ எல்லா பேனிலும் கஷ்டப்படுவது என்னவோ இந்திய குடிமக்கள்தான்.

    English summary
    UP CM Yogi Adityanath's ban on Marriage causes a huge outrage.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X