For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாஜ்மகால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆதித்யநாத் என்ன செய்யப்போகிறார் தெரியுமா?

தாஜ்மகால் என்பது இந்திய மக்களின் அதுவும் இளைஞர்களிடம் உணர்வுப்பூர்வமாக கலந்துவிட்ட நிலையில், அதுகுறித்த சர்ச்சையில் பாஜக எம்எல்ஏ இறங்கியுள்ளதால் முதல்வர் அவரிடம் விளக்கம் கேட்டதாக பாஜக வட்டாரங்கள் கூற

By Veera Kumar
Google Oneindia Tamil News

லக்னோ: தாஜ்மகால்குறித்த சர்ச்சைகளுக்கு முடிவு கட்ட உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரும் 26ம் தேதி தாஜ்மகாலுக்கு செல்ல உள்ளார். முதல்வராக பதிவியேற்ற பிறகு யோகியின் முதலாவது தாஜ்மகால் வருகை இதுவாகும்.

சர்ச்சைகள் தாஜ்மகாலை சுற்றி யமுனை ஆற்றைவிட வேகமாக ஓடிக்கொண்டுள்ள சூழலில், ஆதித்யநாத்தின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது. பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம் கூறியிருந்தார்.

UP CM Yogi Adityanath Will Visit Taj Mahal on October 26

இந்த நிலையில், எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் எம்எல்ஏ, ஆசம் கான் நிருபர்களிடம் கூறுகையில், நம்மை அடிமை செய்தவர்கள் விட்டுச் சென்ற நினைவு சின்னங்களை அழித்தொழிக்க வேண்டும். நாடாளுமன்றம், குதுப்மினார், ராஷ்ரபதி பவன், செங்கோட்டை, தாஜ்மகால் போன்ற எல்லாவற்றையும் இடித்துவிட வேண்டும். என்றார்.

இதுபோன்ற சர்ச்சைகளுக்கு நடுவே, சங்கீத் சோமிடம், முதல்வர் யோகி ஆதித்யநாத் விளக்கம் கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தாஜ்மகால் என்பது இந்திய மக்களின் அதுவும் இளைஞர்களிடம் உணர்வுப்பூர்வமாக கலந்துவிட்ட நிலையில், அதுகுறித்த சர்ச்சையில் பாஜக எம்எல்ஏ இறங்கியுள்ளதால் முதல்வர் அவரிடம் விளக்கம் கேட்டதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வரும் 26ம் தேதி தாஜ்மகாலுக்கு விசிட் செய்கிறார் யோகி ஆதித்யநாத்.

English summary
In a clear snub to his MLA Sangeet Som for stirring the Taj Mahal controversy, Uttar Pradesh Chief Minister Yogi Adityanath is set to visit the monument on October 26.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X