For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலித் பெண்ணை தூக்கி சென்று.. சீரழித்து.. எலும்புகளை அடித்து நொறுக்கி.. நாக்கை வெட்டிய 4 பேர்!

Google Oneindia Tamil News

கான்பூர்: தலித் பெண் ஒருவர், வயலில் புல் அறுத்து கொண்டு வந்தபோது, உயர்ந்த சாதியை சேர்ந்த 4 பேர் அந்த பெண்ணை தூக்கி சென்று நாசம் செய்துள்ளனர்.. இறுதியில் அந்த பெண்ணை பலமாக தாக்கி உடம்பில் உள்ள எலும்புகளை நொறுக்கி உள்ளனர்.. அவரது நாக்கை அறுத்து எறிந்துள்ளனர்.. ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்த அப்பாவி பெண் பரிதாபமாக மரணமடைந்தார்!

உத்தரபிரதேசத்தை நினைத்தாலே குலை நடுங்குகிறது.. அது என்ன ஊர் என்ற அதிர்ச்சியை நாளுக்கு நாள் ஏற்படுத்தி கொண்டே இருக்கிறது.. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதும் நிரூபணமாகியே வருகிறது. இது லாக்டவுன் சமயத்திலும் குறையவில்லை என்பதுதான் ஷாக்!

ராத்திரி

ராத்திரி

நேற்றுகூட ஒரு சம்பவம் நடந்துள்ளது.. பைசாலி பஸ் ஸ்டேண்டில் இருந்து கிளம்பிய ஒரு பஸ்ஸில் இளம் பெண் ஒருவர் ஏறியுள்ளார். அது ராத்திரி நேரம்.. பஸ்ஸில் வேறு யாரும் இல்லை.. வெறும் டிரைவரும், கண்டக்டரும் மட்டும் இருந்திருக்கிறார்கள்.. மீரட் - டெல்லி ரோட்டில் பஸ் சென்றபோது, அந்த பெண்ணிடம் பரிதாபமாக பேசி, மயக்க மருந்து கலந்த கூல்டிரிங்ஸை குடிக்க வைத்துள்ளனர்.

 பலாத்காரம்

பலாத்காரம்

பெண் மயங்கி விழுந்ததும், ஒரு இருட்டு பகுதிக்கு பஸ்ஸை ஓட்டிக் கொண்டு போய், டிரைவரும், கண்டக்டரும் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.. பிறகு அரை மயக்கத்தில் இருந்த பெண்ணை மீரட் ரோட்டில் இறக்கிவிட்டுவிட்டு போயுள்ளனர். பிறகு போலீசாருக்கு விஷயம் தெரிந்து அந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து, இது சம்பந்தமான விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

 தலித் பெண்

தலித் பெண்

இதுபோலவே இன்னொரு சம்பவமும் உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்துள்ளது.. இது ஒரு சிறிய மாவட்டமாகும்.. இதன் கிராமங்களில் ஒன்றான சண்ட்பாவை சேர்ந்த 20 வயது தலித் பெண் அவர்.. 2 நாளைக்கு முன்பு, விவசாய பகுதியில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.. பிறகு வேலை முடித்துவிட்டு, புல் அறுத்து கொண்டு, வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அந்த பகுதியில் உள்ள 4 இளைஞர்கள் அவரை வழிமறித்து, கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

உயர்சாதி

உயர்சாதி

4 பேருமே உயர்சாதியை சார்ந்தவர்களாம்.. பலாத்காரம் செய்ததுடன், அந்த பெண்ணை கடுமையாக தாக்கியும் உள்ளனர். உடல் முழுவதும் அந்த பெண்ணுக்கு எலும்பு முறிவுகள் பல இடங்களில் ஏற்படும் அளவுக்கு அடித்துள்ளனர்.. உண்மையை வெளியே சொல்லக்கூடாது என்பதற்காக அவரது நாக்கையும் வெட்டி, ரோட்டோரம் அவரது உடலை வீசிவிட்டு சென்றுள்ளனர்.

பெற்றோர்

பெற்றோர்

அந்த வழியாக சென்ற கிராமவாசிகள் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் பெண்ணை கண்டு, பெற்றோருக்கு விஷயத்தை சொன்னார்கள்.. அவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடி, மகளை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.. சம்பந்தப்பட்ட 4 பேர் மீதும் போலீசில் புகார் தந்தனர்.. அந்த புகாரின் பேரில் 4 பேரையும் பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை குற்றச்சாட்டு போன்ற பிரிவுகளின் கீழ் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

உதவிகள்

உதவிகள்

ஆனால், அவர்கள் மீது சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று பெற்றோர் கதறினர்.. ஆரம்பத்தில் இருந்தே போலீசார் இந்த விஷயத்தில் தங்களுக்கு உதவவில்லை என்றும், இந்த வழக்கின் எதிர்ப்பை தெரிந்த பிறகுதான் அவர்களை கைது செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.

 எலும்புகள் முறிவு

எலும்புகள் முறிவு

இதனிடையே, ஆபத்தான நிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாலும், அங்கு நவீன சிகிச்சை இல்லாததால், அருகிலுள்ள அலிகரின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெண் சேர்க்கப்பட்டார்.. அவருக்கு இரு கை, கால்களில் உணர்வே இல்லை.. உடம்பில் உள்ள எலும்புகள் நொறுங்கி உள்ளதையும், நாக்கு அறுக்கப்பட்டுள்ளதையும் கண்டு டாக்டர்கள் அதிர்ந்தனர்.. அதனால் தீவிரமான சிகிச்சையை தந்து வந்தனர்.. ஆனால் பலனில்லாமல், அந்த பெண் இறந்தே விட்டார்.

 தாகூர் சமுதாயம்

தாகூர் சமுதாயம்

சம்பந்தப்பட்ட சண்ட்பா என்ற கிராமத்தில் தாக்கூர், பிராமணர் மற்றும் தலித் என ஐந்து பிரிவினர் வாழ்ந்து வருகிறார்களாம்.. கிராமத்தில் சரிசமமாக இந்த இனங்கள் இருந்தாலும், தாக்கூர் சமூகத்தினரின் கை மட்டுமே அதிகமாக இங்கு ஓங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.. இந்த தரப்பின் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டின் பின்னணியில் புகார்களும் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த அந்த 4 பேரில் 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்னர்.. இன்னொருவரை தேடி கொண்டிருக்கிறார்கள்!

நிதியுதவி

நிதியுதவி

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ .10 லட்சம் உதவி வழங்கப்படும் என்று ஹத்ராஸ் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பிரியங்கா காந்தி கடுமையான அதிர்ச்சியை பதிவிட்டுள்ளார். தன்னுடைய ட்வீட் பக்கத்தில், "இந்தப் படுபாதகத்தை செய்தவர்கள் தண்டனை பெற்றாக வேண்டும். யோகி ஆதித்யநாத் அவர்களே நீங்கள்தான் பெண்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பு.. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று காட்டமாகவே தெரிவித்துள்ளர்.

யோகி

யோகி

அதேபோல, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த சம்பவத்தை நாட்டுக்கு "வெட்கக்கேடானது" என்று கூறினார். "இந்த மரணம் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும், நாட்டிற்கும், மற்றும் அனைத்து அரசாங்கங்களுக்கும் வெட்கக்கேடானது. பல மகள்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது வருத்தமளிக்கிறது, அவர்களால் எங்களால் பாதுகாக்க முடியவில்லை. குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட வேண்டும்" என்று ஆவேசமாக கூறியுள்ளார். தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தினால், யோகி அரசுக்கு நெருக்கடி கூடி கொண்டே வருகிறது.

English summary
UP dalit girl molested by a gang and murdered
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X