For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பயிற்சி பெண் நீதிபதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, 11 பயிற்சி நீதிபதிகள் டிஸ்மிஸ்: உ.பி அரசு அதிரடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

லக்னோ: பயிற்சி பெண் நீதிபதியிடம் தவறாக நடந்து கொண்ட 11 பயிற்சி நீதிபதிகளை உத்தரபிரதேச அரசு அதிரடியாக நீக்கம் செய்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் 2012ம் ஆண்டு 40 மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட வேண்டிய சிவில் நீதிபதி, ஜூனியர் சிவில் நீதிபதி மற்றும் மாஜிஸ்திரேட்டு பதவிகளுக்காக 22 பெண்கள் உள்பட 74 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் லக்னோ நகரில் உள்ள மாநில நீதித்துறை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி தொடங்கி 4 மாத கால பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி முடிவதற்கு ஒருநாள் முன்பாக, லக்னோ நகரில் உள்ள ஒரு உணவகத்தில் பயிற்சி நீதிபதிகள் அனைவருக்கும் ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது மது போதையில் இருந்த சில ஆண் நீதிபதிகள், பயிற்சி பெண் நீதிபதி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிகிறது.

பயிற்சி நீதிபதிகள் தனக்கு அளித்த தொல்லை குறித்து, அந்த பயிற்சி பெண் நீதிபதி அலகாபாத் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட அளவிலான நீதிபதிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதில், பெண் பயிற்சி நீதிபதியிடம் 20 பயிற்சி நீதிபதிகள் தவறான முறையில் நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து முதற்கட்ட விசாரணை அடிப்படையில் 20 பயிற்சி நீதிபதிகளை தற்காலிக நீக்கம் செய்யும்படி அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சாந்த் சூட் மற்றும் 9 மூத்த நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழு பரிந்துரை செய்தது. ஆனாலும், உயர் நீதிமன்றத்தின் முழுமையான அமர்வின் நிர்வாக குழு இந்த பரிந்துரையை மாநில முதல்வருக்கு அனுப்பியபோது சம்பவத்தில் நேரடித் தொடர்பு கொண்டிருந்த 11 பேரை பதவி நீக்கம் செய்யும்படி கேட்டுக்கொண்டது. மேலும் அந்த பரிந்துரையில், இந்த பயிற்சி நீதிபதிகள் 11 பேரும் நீதிபதி ஆவதற்கே தகுதி அற்றவர்கள் என்றும் தெரிவித்திருந்தது. இந்த பரிந்துரையை மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து மாநில நியமன துறை 11 நீதிபதிகளை பணி நீக்கம் செய்துள்ளது.

English summary
The Uttar Pradesh government has ordered termination of the services of 11 trainee judicial officers for indecent behaviour and indiscipline.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X