For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2019 தேர்தல்: பாஜக ஆளும் மாநிலங்களில் காங். வாக்கு சதவீதம் அதிகரிக்கும்:இந்தியா டுடே கருத்து கணிப்பு

வரும் தேர்தலில் பாஜக ஆளும் மாநிலங்களில் காங்கிரஸ் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்கிறது இந்தியா டுடே கருத்து கணிப்பு.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக ஆளும் மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்கின்றன இந்தியா டுடே கருத்து கணிப்பு முடிவுகள்.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அடுத்த லோக்சபா தேர்தலுக்கு நாடு தயாராகி வருகிறது.

இந்த நிலையில் லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக இந்தியா டுடே கருத்து கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 274 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைக்கும் என்கிறது இக்கருத்து கணிப்பு.

ம.பியில் பாஜகவுக்கு சரிவு

ம.பியில் பாஜகவுக்கு சரிவு

அதேநேரத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வாக்கு சதவீதம் சற்று உயரும் என்கிறது இக்கருத்து கணிப்பு. மத்திய பிரதேசத்தில் பாஜக கூட்டணியின் வாக்கு சதவீதமான 54%-ல் இருந்து 50% ஆக குறையும். காங்கிரஸ் கூட்டணியின் வாக்கு சதவீதம் 34%-ல் இருந்து 50% ஆக அதிகரிக்குமாம்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸுக்கு கூடுதல் வாக்கு

மகாராஷ்டிராவில் காங்கிரஸுக்கு கூடுதல் வாக்கு

மகாராஷ்டிராவில் பாஜக அணி வாக்கு சதவீதம் 51%-ல் இருந்து 48% ஆக குறையுமாம். காங்கிரஸ் அணிக்கு 35% இருந்த வாக்கு சதவீதம் 40% ஆக அதிகரிக்குமாம்.

பீகாரில் பாஜகவுக்கு ஜே

பீகாரில் பாஜகவுக்கு ஜே

பீகாரில் 51%-ல் இருந்த பாஜக அணியின் வாக்கு சதவீதம் 60% ஆக உயருமாம். 2014-ல் 28% ஆக இருந்த காங்கிரஸ் அணியின் வாக்கு சதவீதம் 34% ஆக உயருமாம்.

ராஜஸ்தானில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும்

ராஜஸ்தானில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும்

ராஜஸ்தானில் 2014-ல் பாஜக அணியின் வாக்கு சதவீதம் 45%. வரும் தேர்தலில் இது 39% ஆக குறையுமாம். ஆனால் காங்கிரஸ் அணியின் வாக்கு சதவீதம் 33%-ல் இருந்து 44% ஆக அதிகரிக்கும் என்கிறது கருத்து கணிப்பு.

குஜராத்தில் காங்கிரஸுக்கு அதிகமாம்

குஜராத்தில் காங்கிரஸுக்கு அதிகமாம்

குஜராத்தில் 2014-ம் ஆண்டு பாஜக அணி 59% வாக்குகளைப் பெற்றது. வரும் தேர்தலில் 54% வாக்குகள் பாஜக அணிக்கு கிடைக்குமாம். காங்கிரஸ் அணிக்கு 33% ஆக இருந்த வாக்குகள் 42% ஆக உயருமாம். மத்திய பிரதேசத்தில் பாஜக கூட்டணியின் வாக்கு சதவீதமான 54%-ல் இருந்து 50% ஆக குறையும். காங்கிரஸ் கூட்டணியின் வாக்கு சதவீதம் 34%-ல் இருந்து 50% ஆக அதிகரிக்குமாம்.

காங்கிரஸ் மீளுமாம்

காங்கிரஸ் மீளுமாம்

உத்தரப்பிரதேசத்திலும் 43% ஆக இருந்த பாஜகவின் வாக்கு சதவீதம் 35% ஆக குறையுமாம். காங்கிரஸ் கூட்டணியின் வாக்கு சதவீதம் 8%-ல் இருந்து 12% ஆக உயருமாம்.

English summary
According to the India Today Survery reports. Congress Lead UPA will get more vote share in 2019 Loksabha Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X