For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மாடியோவ்.... மன்மோகன் சிங்கின் 73 வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ. 676 கோடி செலவு!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தமது பதவி காலத்தில் 73 வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ676 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் ராஷ்டிர ரக்ஷக் ஜன்மஞ்ச் என்ற அமைப்பின் தலைவர் ரமேஷ் சந்த் ஜோஷி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் குறித்து தகவலைப் பெற்றுள்ளார்.

UPA Government Spent Whopping Rs 676 Crore in 10 Years for Manmohan Singh's Foreign Visits

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

  • 2004ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை அவர் மொத்தம் 73 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.
  • இதில் 2009-2014ஆம் ஆண்டு காலத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்ற போது 15 வெளிநாட்டுப் பயணங்களை மன்மோகன்சிங் மேற்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
  • அதிகபட்சமாக அமெரிக்காவுக்கு 6 முறை மன்மோகன்சிங் சென்றுள்ளார். ஆனால் இந்தியாவின் அண்டைநாடுகளுக்கு மிகக் குறைவான முறையே அவர் பயணம் மேற்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
  • 2012ஆம் ஆண்டு மெக்சிகோ மற்றும் பிரேசில் பயணத்துக்கு அதிகபட்சமாக ரூ26.94 கோடி செலவிடப்பட்டுள்ளது.
  • இதற்கு அடுத்தபடியாக 2010ஆம் ஆண்டு அமெரிக்கா- பிரேசில் பயணத்துக்கு ரூ22.7 கோடி செலவிடப்பட்டுள்ளது.
  • மன்மோகன்சிங்குக்கு முன்னர் 1999-2004ஆம் ஆண்டு பிரதமராக இருந்த வாஜ்பாய் 35 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருந்தார். அந்த பயணங்களுக்கான செலவு ரூ185 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
English summary
The government spent more than Rs 676 crore on ex-Prime Minister Manmohan Singh’s foreign visits, a response sought under the RTI Act by activist Daniel Jesudass has found.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X