For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐக்கிய முற்போக்கு கூட்டணி வாக்கு வங்கி 6% அதிகரிப்பு: இந்தியா டுடே சர்வே

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: கடந்த லோக்சபா தேர்தலை விட தற்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளதாக இந்தியா டுடே சர்வே தெரிவிக்கிறது.

இந்தியா டுடேவிற்காகக, CSDS-Lokniti நடத்திய சர்வே முடிவுகள் வெளியாக துவங்கியுள்ளன.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு இருப்பதாக இந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

UPA seen a greater increase of 31 per cent this year from 2014s 25 per cent

டைம்ஸ் நவ் டிவி கருத்து கணிப்பும் இதேபோன்றுதான் கூறியுள்ளது. இருப்பினும், எதிர்க்கட்சி கூட்டணியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கடந்த தேர்தலை ஒப்பிட்டால், வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலிமையானால் வாக்கு வங்கி மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

2014ம் ஆண்டு 25 சதவீதமாக இருந்த காங்கிரஸ் கூட்டணி வாங்கி வங்கி இப்போது 31 சதவீதமாக அதிகரித்துள்ளதாம். ஆனால், பிற கட்சிகளின் வாங்கு வங்கி 2014ல் 39 சதவீதமாக இருந்தபோதும், தற்போதைய சூழலில் இது 32 சதவீதமாக குறைந்துள்ளதாம்.

பாஜக கூட்டணியின் வாக்கு வங்கியும் லேசாக அதிகரித்துள்ளது. கடந்த தேர்தலின்போது 36 சதவீதமாக இருந்த வாக்கு வங்கி 37 சதவீதமாக இப்போது அதிகரித்துள்ளதாம்.

English summary
Though not as much as the NDA, the UPA saw a greater increase of 31 per cent this year from 2014s 25 per cent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X