For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தோற்றாலும், ஜெயித்தாலும் காங்கிரஸ் கூட்டணி உடையாது: சரத்பவார்

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: தேர்தலி்ல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து ஆட்சியமைக்க முடியாமல்போனாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் அதைவிட்டு விலகாது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்தார்.

பத்திரிகையாளர்களுக்கு சரத்பவார் அளித்த பேட்டியில் இதுகுறித்து கூறியதாவது:

ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒருவேளை பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றாலும் காங்கிரசை விட்டு அதன் கூட்டணி கட்சிகள் விலகிச் செல்லாது.

UPA will not split even in defeat, says Sharad Pawar

ராகுல்காந்தியின் பிரச்சார யுக்திகள் தோல்வியடைந்ததால்தான் அவரது சகோதரி பிரியங்கா காந்தியை முன்னிருத்துவதாக நான் நினைக்கவில்லை. ராகுல் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஆயினும் அவர் மத்திய அரசில் அமைச்சராக பொறுப்பு வகித்திருந்தால் நிர்வாகத்தில் அவருக்கு அனுபவம் கிடைத்திருக்கும். பிரதமர் அழைத்தும்கூட அவர் அமைச்சரவையில் இணைய ராகுல்காந்தி
ஒப்புக்கொள்ளவில்லை.

ராகுல்காந்தி பஸ்சை தவற விட்டுவிட்டதாகவே கருதுகிறேன். காங்கிரஸ் ஒருவேளை எதிர்க்கட்சி வரிசையில் அமர நேர்ந்தாலும், ராகுல்காந்தி தலைமையில் நல்ல வலிமையான தலைவர்கள் எதிர்க்கட்சிக்குறிய பணிகளை ஆற்றுவார்கள்.

மன்மோகன்சிங் சிறப்பாக ஆட்சி செய்திருந்தாலும், தொடர் விமர்சனங்களால் செய்த நல்ல விஷயங்கள் மறைந்துவிட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
NCP chief Sharad Pawar has said it will hold together even in defeat and Congress will revive after the setback.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X