For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி ராஜ்யசபாவில் அதிமுக எம்பிக்கள் முழக்கம்-மீண்டும் ஒத்திவைப்பு

ஓகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி அதிமுக உறுப்பினர்கள் ராஜ்யசபாவில் வலியுறுத்தினர்.

Google Oneindia Tamil News

டெல்லி: ஓகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி அதிமுக உறுப்பினர்கள் ராஜ்யசபாவில் வலியுறுத்தினர். இதனிடையே காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் ராஜ்யசபா தொடங்கியது. அப்போது தமிழகத்தை சூறையாடிய ஓகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி அதிமுக எம்பிக்கள் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் முழக்கமிட்டனர்.

Uproar in Rajya sabha: adjourn till 12PM

அப்போது சரத்யாதவ் எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. கூச்சல் குழப்பம் நீடித்ததால் ராஜ்யசபா பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் கூடியபோது காங்கிரஸ் குறித்து பேசிய கருத்துக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் எம்பிக்கள் முழக்கமிட்டனர். தொடர்ந்து அமளி நீடித்ததால் ராஜ்ய சபா மீண்டும் பிற்பகள் 2.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

English summary
Rajya sabha adjourn till 12PM. ADMK MPs urged to announce Ockhi cyclone as national disaster. Opponet party MPs started Sarathyadhav issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X