For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா எங்களுக்கு நண்பன்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிப்போம்.. பாக்.கிற்கு டிரம்ப் மறைமுக எச்சரிக்கை!

இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

அகமதாபாத்: இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Modi welcomes Trump | இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

    அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய வருகை களைகட்டி இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முதல் இந்திய அரசுமுறை பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா வந்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று குஜராத்தில் மக்கள் முன்னிலையில் பேசினார். அகமதாபாத்தில், ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் கூடியுள்ள மொதேரா அரங்க மேடையில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மக்கள் முன்னிலையில் பேசினார்கள்.

    அன்று அமெரிக்காவின் ஸ்டேடியத்திற்கு வந்த மோடி.. இன்று என்னை இங்கு வரவழைத்துள்ளார்.. டிரம்ப்அன்று அமெரிக்காவின் ஸ்டேடியத்திற்கு வந்த மோடி.. இன்று என்னை இங்கு வரவழைத்துள்ளார்.. டிரம்ப்

    டிரம்ப் பேச்சு

    டிரம்ப் பேச்சு

    அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பேச்சில், கலாச்சாரம், வாழ்வியல், பொருளாதாரத்தில் இந்தியா இணைந்து செயல்படுகிறது. இந்தியாவின் சாம்பியன், ஒப்பற்ற தலைவர் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி. இந்தியா மீது எப்போதும் எங்களுக்கு காதல் உண்டு. வேறுபாடுகளை களைந்து அனைத்து மதத்தினரும் இந்தியாவில் ஒற்றுமையாக, உலகிற்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகின்றனர். இந்தியர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் பிரதமர் மோடி

    அமெரிக்கா

    அமெரிக்கா

    இந்தியாவும் அமெரிக்காவும் தீவிரவாதத்தை ஒழிப்பதில் தீவிரமாக செயல்படுகிறது. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிப்பதில் நாங்கள் தீவிரமாக கவனம் செலுத்துகிறோம்.இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக உலகம் முழுக்க அமெரிக்கா குரல் கொடுத்து வருகிறது. எங்களது தேசத்தின் எல்லைகள் தீவிரவாதிகளுக்கு எப்போதும் மூடப்பட்டதாகவே இருக்கும்

    ஆசியா எப்படி

    ஆசியா எப்படி

    ஆசியாவில் இந்தியாவும் தீவிரமாக தீவிரவாதத்தை எதிர்த்து வருகிறது. பாகிஸ்தானை இந்தியா எதிர்த்து வருகிறது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளை ஒடுக்குவதில் இந்தியா முக்கியமான முயற்சிகளை எடுத்துள்ளது. பாகிஸ்தானில் இப்போதுதான் சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அங்கு நடக்கும் மாற்றங்களுக்கு இந்தியாவின் தீவிர முயற்சிதான் காரணம்.

    இணைவோம்

    இணைவோம்

    நாங்களும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒடுக்கி இருக்கிறோம். ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு பக்தாத் அல் பக்தாதியை நாங்கள் என்கவுண்டர் செய்தோம். தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் முயற்சிகளுக்கு உதவுவோம். உலகின் மிகச் சிறந்த மற்றும் மிகவும் அஞ்சப்படும் சில இராணுவ உபகரணங்களை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கும், என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    US and India are united in the pursuit to fight radical Islam says Trump during his India Visit.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X