For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எலித்தொல்லை.. 9 மணி நேரம் தாமதமாக அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்

டெல்லியிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் எலிகள் தொல்லையால் 9 மணி நேரம் தாமதாமாக புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

By Devarajan
Google Oneindia Tamil News

டெல்லி: எலிகள் தொல்லையால் ஏர் இந்தியா 9 மணி நேரம் தாமதமாக டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் அவதிப்பட்டனர்.

டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்திலிருந்து சான்பிரான்ஸிஸ்கோ செல்லும் ஏர் இந்திய விமானம் நேற்று புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்தின் உள்ளே எலிகள் நடமாட்டம் இருந்துள்ளது.

US-bound Air India flight was delay for 9 hours

அதிர்ந்த பயணிகள் புகாரளிக்க, எலிகளை விரட்டினர் ஏர் இந்தியா ஊழியர்கள். 9 மணி நேரம் தாமாதமான நிலையில் ஏர் இந்தியா விமானம் மீண்டும் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றது.

இதுகுறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், " போயிங் 777 விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிகாலை 2.30 மணிக்குப் புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் ஏதோ மாற்றம் தெரிய விமானி எச்சரிக்கையடைந்தார்.

இதனையடுத்து, பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர். விமானம் ஷெட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு செய்யப்பட்ட சோதனையில், விமானத்தின் உள்ளே எலி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

பின்னர் விமானத்தின் அனைத்து கன்ட்ரோ ல் அமைப்புகளும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. வேறு ஒன்றும் இல்லை என்று உறுதி செய்யாத பின்னரே பின்னரே பயணிகள் ஏற்றப்பட்டு ஏர் இந்தியா விமானம் மீண்டும் அமெரிக்கா கிளம்பியது" என்று தெரிவித்தனர்.

விமானத்தின் உள்ளே எலிகள் வந்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஏர் இந்தியா புதிய சேர்மன் ராஜீவ் பன்சால் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். சர்வேதேச அளவில் எலிகள், பயணிகள் கீழே சிந்தும் உணவுப்பொருட்களை தின்பதற்காக, உள்ளே வந்துவிடுகின்றன.

இது சர்வதேச அளவில் எல்லா விமான நிலையத்திலும் பெரிய பிரச்சனையாக உள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் புகுந்த எலி நடுவானில், முக்கியமான வயர் இணைப்புகளை கடித்து சேதப்படுத்தியிருந்தால் பெரிய அளவுக்கு விபத்து ஏற்பட்டிருக்கும், அதனை முன்னரே விமானி கண்டுபிடித்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது என்கிறார்கள் பயணிகள்.

English summary
Air India's Delhi-San Francisco flight delayed it by over nine hours by rat on board .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X