• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா- யு.எஸ். இடையே பொருளாதார ஒத்துழைப்பு தேவை: ஜான் கெர்ரி வலியுறுத்தல்

By Mathi
|

இந்தியா-அமெரிக்கா இடையே பெரிய அளவில் பொருளாதார ஒத்துழைப்பு தேவை என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி வலியுறுத்தியுள்ளார்.

குஜராத்தில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் (வைப்ரன்ட் குஜராத்) தொடக்க விழாவில் பங்கேற்ற ஜான் கெர்ரி பேசியதாவது:

இந்தியாவும் அமெரிக்காவும் 4 முக்கிய பிரச்சனைகளில் இணைந்து செயல்பட வேண்டும். காலநிலை மாற்றம், பாதுகாப்பு, ஆக்கப்பூர்வமான அணுசக்தி பயன்பாடு, பொருளாதாரம் ஆகிய 4 அம்சங்களில் இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

US, India have invested in bilateral relationship: Kerry

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள சாதகமான சந்தர்ப்ப சூழ்நிலைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள இதைவிட நல்ல நேரம் அமையாது.

பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் பாராட்டுக்கு உரியது. "நம் அனைவரின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் பங்கேற்போம்" என்ற மோடியின் திட்டம் மிகவும் சிறப்பானது.

இந்தியாவில் அனைத்து நாளும் 24 மணிநேரமும் மின்சாரம் கிடைக்க வேண்டும் என்ற மோடியின் செயல்திட்டத்துக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும்.

இதை உலகில் உள்ள அனைவரும் கடைப்பிடித்தால் எல்லோருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மோடியின் ‘மேக் இன் இந்தியா' திட்டம் இந்த உலகில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை வழங்கக்கூடியது.

இந்த சந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இரு நாடுகளுக்கிடையிலான ஆண்டு வர்த்தகம் கடந்த 2000 ஆண்டிலிருந்து 5 மடங்காக அதிகரித்துள்ளது. இருதரப்பு அந்நிய நேரடி முதலீடு ரூ.1.89 லட்சம் கோடியாகி உள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவு வரும் காலங்களில் மேலும் அதிகரிப்பதை உறுதி செய்ய வேண்டும். வரும் காலங்களில் இருதரப்பு வர்த்தகம் 5 மடங்காக அதிகரிக்க வேண்டும் என்ற மோடியின் இலக்கை அடைய முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்.

முதன்முறையாக அமெரிக்க அதிபர் ஒருவர் வரும் 26-ந் தேதி நடைபெற உள்ள இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க உள்ளார். இதில் கலந்துகொள்வதற்கு பராக் ஒபாமா மிகவும் ஆர்வமாக உள்ளார்.

மேலும் இந்தப் பயணத்தின் மூலம் 2 முறை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையையும் அவர் பெறப் போகிறார்.

பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு பத்திரிகை அலுவலகம் மீதான தீவிரவாத தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்தத் தருணத்தில் உலக நாடுகள் அனைத் தும் பிரான்சுக்கு ஆதரவாக உள்ளன. இந்ந நாடுகள் வெறும் ஆறுதலோடு நிறுத்திக் கொள்ளாமல் தீவிரவாதத்தை ஒழிக்க உறுதி பூண்டுள்ளன.

இவ்வாறு கெர்ரி உரையாற்றினார்.

எதிர்க்கட்சிகள் கண்டனம்

இதனிடையே வைப்ரன்ட் குஜராத் மாநாடு நடத்துவதன் மூலம் குஜராத்தை மட்டுமே பிரதமர் மோடி கவனிக்கிறார்.. இந்த மாநாடு என்பது ஒரு ஏமாற்று வேலை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி கூறுகையில், பிரதமர் மோடி அரசு வெற்று விளம்பரத்தைத்தான் நம்பிக் கொண்டிருக்கிறது. நடைமுறையில் ஆக்கப்பூர்வமான பணிகள் எதனையுமே செய்யவில்லை என்று சாடியுள்ளார்.

இதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தாரிக் அன்வர் கூறுகையில், இத்தகைய மாநாடுகளை பின்தங்கியுள்ள பிற மாநிலங்களிலும் நடத்தி முதலீடுகளை ஈர்க்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் பிரதமர் மோடி ஒட்டுமொத்தமாக இந்த நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் கேசி தியாகி கூறியுள்ளார்.

English summary
US Secretary of State John Kerry today said both India and United States have invested in the relationship and will continue to deepen it by creating a healthier, more secure and prosperous future to be able to impact policies that affect the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X