For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபர்மதி ஆசிரமத்தை ஆச்சரியத்துடன் பார்வையிட்டார் டொனால்ட் டிரம்ப்!

Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது மனைவி மெலானியும் அங்குள்ள காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தை மிகவும் ஆச்சரியத்துடனும் அதிசயத்துடனும் பார்வையிட்டனர்.

Recommended Video

    Trump india visit | சபர்மதி ஆசிரமத்தில் ராட்டை சுற்றினார் டிரம்ப்

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மனைவி மெலானியா, மகள் இவாங்கா, மருமகன் ஆகியோருடன் இந்தியாவுக்கு சரியாக 11.40 மணிக்கு வருகை தந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடியும் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும் வரவேற்றனர்.

    குஜராத்திய பாரம்பரிய நடனங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேள தாளங்கள் முழங்கியது.

    அன்று அமெரிக்காவின் ஸ்டேடியத்திற்கு வந்த மோடி.. இன்று என்னை இங்கு வரவழைத்துள்ளார்.. டிரம்ப்அன்று அமெரிக்காவின் ஸ்டேடியத்திற்கு வந்த மோடி.. இன்று என்னை இங்கு வரவழைத்துள்ளார்.. டிரம்ப்

    மெலானியா

    அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு தனது பீஸ்ட் காரில் புறப்பட்டார். வழி நெடுகிலும் பொதுமக்கள் கூடி நின்றிருந்தனர். ஆங்காங்கே மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதையடுத்து மோடி, டிரம்ப், மெலானியா ஆகியோர் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்தனர்.

    நூல் மாலை

    அங்கு அவர்களுக்கு ஆசிரம நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். காந்திக்கு விருப்பமான ரகுபதி ராகவ ராஜாராம் பாடல் பள்ளி மாணவர்களால் பாடப்பட்டது. உள்ளே செல்வதற்கு முன்னர் காலணிகளை கழற்றிவிட்டுவிட்டு சென்றனர். அங்கு டிரம்பிற்கு சபர்மதி ஆசிரமத்தின் வரலாற்று சிறப்புகளை விளக்கினார் பிரதமர் மோடி. காந்தியடிகளின் உருவப்படத்துக்கு நூலினால் ஆன மாலையை டிரம்ப், மோடி அணிவித்தனர் .

    ஆச்சரியம்

    ஆச்சரியம்

    காந்தியடிகள் பயன்படுத்திய கைராட்டையின் சிறப்புகளை டிரம்ப்புக்கு விளக்கினார் பிரதமர் மோடி. அந்த ராட்டையை தன் கையால் டிரம்ப் பயன்படுத்தி பார்த்தார். காந்தியடிகளின் கை ராட்டையை இயக்குவது எப்படி என்பது குறித்து டிரம்புக்கு சபர்மதி ஆசிரம நிர்வாகி விளக்கினார். சபர்மதி ஆசிரமத்தின் ஒவ்வொரு இடத்தையும் டிரம்ப் ஆச்சரியத்துடன் பார்வையிட்டார்.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    பின்னர் சபர்மதி ஆசிரமத்தின் திண்ணையில் அமர்ந்து டிரம்பும் மோடியும் ஆலோசனை நடத்தினர். பின்னர் அங்கிருந்து விருந்தினர் பதிவேட்டில் டொனால்ட் டிரம்ப் தமது கருத்துகளை பதிவு செய்தார். அது போல் மெலானியாவும் பதிவு செய்தார். அந்த விருந்தினர் பதிவேட்டில், என்னுடைய நண்பர் பிரதமர் மோடிக்கு.. நன்றி.. அற்புதமான பயணம் என மகிழ்ந்து பதிவிட்டுள்ளார் டிரம்ப்.

    பிரமிப்பு

    பிரமிப்பு

    பின்னர் காந்தியடிகளின் தீயவற்றை பார்க்காதே; தீயவற்றை பேசாதே; தீயவற்றை கேட்காதே என்ற குரங்கு பொம்மைகள் மூலமான கருத்தை டிரம்ப்பிடம் பகிர்ந்து கொண்டார் பிரதமர் மோடி. ஆசிரமத்தில் ஒவ்வொரு இடத்தையும் டிரம்பும் மெலானியாவும் ஆர்வத்துடனும் அதிசயத்துடனும் பிரமிப்புடனும் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

    English summary
    US President Donald Trump and his wife Melania Trump visited Sabarmati Ashram with lot of happiness.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X