For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருப்பு கோட் சூட்.. நடுவுல மஞ்சள் கலரில் டை.. மறுபக்கம் கராத்தே பெல்ட் மாதிரி டிரஸ்ஸில் மெலனியா..!

Google Oneindia Tamil News

அஹமதாபாத்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலானியா டிரம்புடன் இன்று இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

கிட்டத்தட்ட இன்னும் சில மாதங்களில் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட போகும் டிரம்ப், இந்தியர்களின் வாக்குகளை கவர்வதற்காக இந்தியா வந்ததாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

வர்த்தக ரீதியாக எந்த ஒரு பெரிய ஒப்பந்தத்தையும் மேற்கொள்ள மாட்டேன் என்று வாய்திறந்து சொல்லிவிட்டு இந்தியாவிற்கு வந்துள்ள டிரம்ப், தனது நண்பர் மோடியின் அழைப்பின் பேரில்வந்து அவரைப் போலவே நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார்.

நாறும் யமுனை.. நாறும் யமுனை.. "கழுவி விடும்" உ.பி. அரசு.... ஆத்தோரமா மல்லிகை தோரணம் வேற.. டிரம்ப் வருகையால் பிஸி!

நமஸ்தே டிரம்ப்

நமஸ்தே டிரம்ப்

வழக்கமாக வரும் வெளிநாட்டு அதிபர்கள், பிரதமர்களை போல் இல்லாமல் பிரதமர் மோடியைப் போலவே கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்து தான், மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியான நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்று உள்ளார். லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றி உள்ளார். மக்கள் அனைவரும் அவரை திரண்டு வந்து வரவேற்க வேண்டும் என்பதை வெளிப்படையாகவே சொன்னவர் டிரம்ப்.

நட்புறவை குறிக்க

நட்புறவை குறிக்க

டிரம்ப் இன்று அணிந்து வந்த உடையில் மஞ்சள் கலரில் டை உள்ளது. இந்தியாவில் மஞ்சள் என்பது மங்களகரமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆங்கிலத்தில் டை என்பதற்கு உறவு நட்பு என்ற அர்த்தங்களும் உண்டு. அந்த வகையில் பார்த்தால் இந்தியவுடான நட்புறவை மறைமுகமாக குறிவைக்கும் வகையில் மங்களகரமாக வந்திருக்கிறார் டிரம்ப்.

டிரம்பின் பேச்சு

டிரம்பின் பேச்சு

வந்தவர் வாக்குகளை கவருவதற்காக வந்தாரா அல்லது நண்பர் மோடியின் அழைப்பை ஏற்று நட்பு ரீதியாக பயணமாக வந்தாரா என்பது அவருக்கே வெளிச்சம்- ஆனால் பாகுபலி மீம்ஸை சேர் செய்தது முதல், இந்திய முன்னணி நட்சத்திரங்களை வெகுவாக புகழ்ந்து அவர் பேசியது வரை பலவும் ஆச்சர்ய ரகங்கள் மற்றபடி வழக்கமானவைதான். டிரம்ப் எப்போதும் மக்கள் தன்னை பற்றியே பேச வேண்டும். நினைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளவர் என்பது அவரது பேச்சில் தெளிவாக தெரிந்தது.

வெள்ளை தேவதை

வெள்ளை தேவதை

காதல் சின்னமான தாஜ்மகாலை கணவரோடு பார்க்க வந்திருக்கும் 49 வயதாகும் மெலானியா டிரம்ப் வெள்ளை உடையில் தேவதை போல் வந்திருக்கிறார். ஆனால் அந்த உடையில் கரேத்தேவில் வாங்கும் பெல்ட் போல் எதையோ வித்தியாசமாக அணிந்திருக்கிறார். அவரது உடை பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. இப்போது கணவருடன் ஆக்ரா சென்றுள்ளார்.

English summary
us president trump dress code like indian sentiment ? melania trump dress feel white
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X