For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வந்துருச்சு யுஎஸ்பியைக் காக்கும் 'காண்டம்'.. இனி தகவல் திருடர்களுக்கு 'கண்டம்'தான்!

Google Oneindia Tamil News

டெல்லி: யுஎஸ்பி கருவிகளை பயன்படுத்துவதில் இப்போதெல்லாம் நிறைய சவால்கள், சிக்கல்கள். ஆனால் இந்த குழப்பங்களிலிருந்து நமது கம்ப்யூட்டர்களையும், அதில் உள்ள முக்கியத் தகவல்களையும் பாதுகாக்க ஒரு புது உபாயம் பிறந்துள்ளது. அதுதான் யுஎஸ்பி காண்டம்..

பெயருக்கேற்ப இதுவும் காண்டம் போலத்தான் இருக்குமாம். அதாவது யுஎஸ்பி கருவி மீது இந்த பாதுகாப்பு கவசத்தைப் பொருத்திக் கொண்டு உங்களது யுஎஸ்பி கேபிளை பயன்படுத்தும் இடத்தில் செருகி வேலையை தொடரலாம்.

இந்த பாதுகாப்பு கவசத்தைத் தாண்டி எந்த தகவல் திருட்டிலும் விஷமிகள் ஈடுபட முடியாதாம்.

தகவல் திருட்டு

தகவல் திருட்டு

யுஎஸ்பி கேபிள்கள் மூலம் இப்போது தகவல் திருட்டு பரவலாகி வருகிறது.

தகவல் திருடும் பின்கள்

தகவல் திருடும் பின்கள்

குறிப்பாக நமக்கு அறிமுகம் இல்லாத கம்ப்யூட்டர்களில் யுஎஸ்பி கேபிள்களை செருகும்போது கவனமாக இருக்க வேண்டியுள்ளது. காரணம், தகவல் திருடும் பின்களை அதில் விஷமிகள் செருகியிருக்கலாம்.

நமக்கே தெரியாமல்

நமக்கே தெரியாமல்

மிகச் சிறிய சாதனமாக இந்த பின்கள் இருக்கும். இதில் நமது யுஎஸ்பியை செருகும்போது அதன் வழியாக அத்தனை தகவல்களையும் திருடி விடுகிறார்கள்.

இனி முடியாது மச்சி...

இனி முடியாது மச்சி...

ஆனால் இதற்கு ஒரு நிவாரணம் தேடியுள்ளது Int3.cc என்ற ஒரு அமைப்பு. இவர்கள் யுஎஸ்பி கேபிள் மீது பொருத்தப்படும் ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்கியுள்ளனர். இதற்கு செல்லமாக யுஎஸ்பி காண்டம் என்றும் பெயரிட்டுள்ளனர்.

தாண்டி வர முடியாதுல்ல..

தாண்டி வர முடியாதுல்ல..

இந்த கவசத்தை யுஎஸ்பி கேபிள் மீது மாட்டிக் கொண்டு பின்னர் அதை பின்னில் செருக வேண்டும். அதன் பிறகு அந்த யுஎஸ்பி வழியாக எந்த தகவலையும் திருட முடியாதாதம்.

உருவம் எப்படின்னு தெரியலையே..

உருவம் எப்படின்னு தெரியலையே..

இந்த யுஎஸ்பி காண்டம் எப்படி இருக்கும் என்ற படத்தை அவர்கள் வெளியிடவில்லை. மாறாக சர்க்யூட் படத்தை மட்டும் வெளியிட்டுள்ளனர்.

எல்லா யுஎஸ்பிக்கும் பொருந்தும்

எல்லா யுஎஸ்பிக்கும் பொருந்தும்

இந்த பாதுகாப்பு கவசத்தை டைப் ஏ, மினி பி, மைக்ரோ பி போர்ட் யுஎஸ்.பிக்களுக்குப் பொருத்தலாம்.

விலை என்ன...

விலை என்ன...

இதன் விலை உள்ளிட்ட விவரங்களையும் இந்த அமைப்பு இதுவரை வெளியிடவில்லை. ஆனால் குறைந்த விலை நிர்ணயிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

வாலிப, வயோதிக அன்பர்களே...இனிமேல் மெடிக்கல் ஷாப்பில் அந்தக் கவசத்தை வாங்கும்போது பக்கத்தில் இருக்கும் எலக்ட்ரானிக் கடைக்குப் போய் இந்தக் கவசத்தையும் வாங்க மறவாதீர்..

English summary
Most of us don't give a second thought while connecting our USB-compatible devices to a computer for charging them.What looks like a normal Micro-USB port could have a computer at the other end copying data from the device without our knowledge. In fact, the term juice-jacking has been assigned to illegal procurement of data from devices plugged by people with an intent to charge them. Now, Int3.cc a community of developers focused on information security have come up with a solution to the problem. The group has launched what it interestingly calls, USB Condoms.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X