For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொஞ்சமாவது அறிவோடு பேசுங்கள்.. பிரதமர் மோடி அதிரடி தாக்கு

ரபேல் பேரம் குறித்து பிரதமர் மோடி அதிரடியாக தாக்கி பேசியுள்ளார்.

Google Oneindia Tamil News

அகமதாபாத்: ரபேல் போர் விமானங்கள் குறித்து நான் சொன்ன கருத்தை திரித்துப் பேசாமல் உள்ளது உள்ளபடியே பார்க்க எதிர்க்கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டும். கொஞ்சமாவது பொது அறிவை பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு இன்று பேசினார். அப்போது எதிர்க்கட்சிகளை உண்டு இல்லை என்று விமர்சித்தார்.

 Use common sense: PM Modi slams Opposition over Rafale attack

பிரதமர் பேசுகையில், ரபேல் விமானங்கள் நம்மிடம் இருந்திருந்தால் நமது போர் விமானம் எதுவும் எதிரிகளால் தாக்கப்பட்டிருக்காது, நமது வீரர்களும் உயிரிழந்திருக்க மாட்டார்கள். எதிரிகள் தரப்பிலும் யாரும் உயிர் தப்பியிருக்க மாட்டார்கள் என்றுதான் நான் கூறியிருந்தேன். இதை கொஞ்சமாவது பொது அறிவோடு புரிந்து கொள்ள எதிர்க்கட்சிகள் முன்வர வேண்டும்.

 ராகுலை கிண்டல் செய்ய போய் விமர்சனத்தில் சிக்கிய பிரதமர்.. மோடியின் பேச்சால் சர்ச்சை ராகுலை கிண்டல் செய்ய போய் விமர்சனத்தில் சிக்கிய பிரதமர்.. மோடியின் பேச்சால் சர்ச்சை

ரபேல் போர் விமானங்களை நாம் இன்னேரம் வாங்கியிருந்தால், உரிய நேரத்தில் அவை கொள்முதல் செய்யப்பட்டிருந்தால், இந்த தாக்குதல் வேறு மாதிரியாக இருந்திருக்கும். இதுதான் நான் கூறியது. ஆனால் நமது விமானப்படையின் தரத்தை நான் சந்தேகப்படுவதாக எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன.

நாட்டிலிருந்து தீவிரவாதம் அகற்றப்பட வேண்டும் என்று தேசமே விரும்புகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியைப் பார்த்து நான் கேட்கிறேன்.. நீங்கள் நமது படையை நம்பவில்லையா. நமது ராணுவத்தினரை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும் என்றார் பிரதமர் மோடி.

English summary
Prime Minister Narendra Modi on Monday made a veiled attack on the Opposition for questioning his statement that the presence of Rafale fighters would have given greater firepower to the Indian Air Force during the February 27 aerial engagement with Pakistan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X