For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த தீபாவளி கின்னஸ் தீபாவளி.. மார்தட்டும் யோகி ஆதித்யாநாத்!

இந்த வருட தீபாவளியை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற செய்யும் வகையில் புதிய விதமாக கொண்டாட யோகி ஆதித்யாநாத் தலைமையிலான உத்திரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்த வருட தீபாவளியை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற செய்யும் வகையில் புதிய விதமாக கொண்டாட யோகி ஆதித்யாநாத் தலைமையிலான உத்திரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மிகவும் பெரிய அளவில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

உத்திர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யாநாத் பொறுப்பேற்ற பின் வரப்போகும் முதல் தீபாவளியாகும் இது. இந்த முதல் தீபாவளியை இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகவும் வித்தியாசமாக பெரிய அளவில் கொண்டாட முடிவு செய்துள்ளார் யோகி ஆதித்யாநாத்.

Uttar Pradesh goverment plans to celebrate this Deepavali as Guinness Deepavali

இதையடுத்து இந்த முதல் தீபாவளியை அவர் எப்படியாவது கின்னஸ் புத்தகத்தில் வர வைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். இதையடுத்து 4 லட்சம் தொண்டர்களை இந்த தீபாவளி விழாவில் கலந்து கொள்ளும் படி கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் ஒரே நேரத்தில் 2 லட்சம் பேரை ஒரு பெரிய மைதானம் முழுக்க விளக்கு ஏற்ற வைக்கும் திட்டத்தையும் உருவாக்கியுள்ளார்.

இதற்கான 90 சதவிகித வேலைகள் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தீபாவளியில் உத்திர பிரதேச மாநில அயோத்தியாவில் நடக்கும் மொத்த நிகழ்வும் கண்டிப்பாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் என்று அவரது தொண்டர்களால் கூறப்படுகிறது.

இந்த கின்னஸ் திட்டம் குறித்து அவர் பேசிய போது ''இது நான் முதல்வர் ஆன பின் நடக்கும் முதல் தீபாவளி கொண்டாட்டம். அதற்காகவே இந்த நிகழ்வு இவ்வளவு பெரிய அளவில் நடக்கிறது. இதே போல் அயோத்தியாவில் ராமர் கோவில் காட்டப்படும் போதும் கொண்டாட்டங்கள் பெரிய அளவில் நடக்கும்'' என்று கூறியுள்ளார்.

English summary
Uttar Pradesh goverment plans to celebrate this Deepavali as Guinness Deepavali. They also planned for large meet up in Ayodhya for light lambing festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X