For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொத்துக் கொத்தாய் மடிந்து விழும் உ.பி. பறவைகள்... மக்கள் பீதி!

Google Oneindia Tamil News

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் பறவைகள் கொத்து கொத்தாக மடிந்து விழுந்ததால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேசம், அமேதி நகருக்கு அருகில் உள்ள கிராமங்களில் 350க்கும் மேற்பட்ட பறவைகள் கோழிகள் வாத்துக்கள் திடீரென மர்ம நோயால் தாக்கப்பட்டு மடிந்தன.

Uttar Pradesh on Bird Flu Alert After 350 Birds Die…

இதுதொடர்பாக அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், " 15 நாட்களுக்கு முன்னர் அருகில் உள்ள கிராமத்தில் அனைத்து கோழிகளும் மடிந்தன. இறந்த கோழிகளை தின்ற காகங்களும் நாய்களும் கூட இறந்துவிட்டன. 15 நாட்களாக அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்" என்றனர்.

உயிரிழந்த பறவைகளை சேகரித்து போபாலில் உள்ள ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டள்ளது. ஆய்வில் பறவைக் காய்ச்சல் காரணமாகவே பறவைகள் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

English summary
After swine flu, the Uttar Pradesh or UP government has sounded a bird flu alert following the outbreak of the avian influenza in Amethi, official sources said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X