For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதெல்லாம் நம்பித்தான் ஆகணும்.. பசு மட்டுமே ஆக்ஸிஜனை வெளியிடுதாம்.. உத்தரகாண்ட் முதல்வர் பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    Trivendra singh speech | பசு சுவாச பிரச்சனையை தீர்க்கிறது.. உத்தரகாண்ட் முதல்வர் பேச்சு- வீடியோ

    டேராடூன்: விலங்குகளில் பசுக்கள் மட்டுமே ஆக்ஸிஜனை வெளியிடுவதாகவும் அவைகள் தான் நம்முடைய சுவாச பிரச்சனை தீர்க்கின்றன என்றும் சர்ச்சைக்குரிய கருத்தினை உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்தர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

    உத்தர்காண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த 2017ம் ஆண்டு முதல் மாநில முதல்வராக திரிவேந்தர சிங் ராவத் பதவி வகித்து வருகிறார்.

    Uttarakhand Chief Minister Trivendra Singh Rawat tell function, cow only Exhale Oxygen

    இந்நிலையில் முதல்வர் திரிவேந்தர சிங் ராவத் டேராடூனில் நேற்று விழா ஒன்றில் பங்கேற்று பேசுகையில், வைரல் வீடியோ ஒன்றை காட்டியதோடு பசுவின் பால் மற்றும் கோமியம் ஆகியவை மருந்தாக பயன்படுவதாக தெரிவித்தார்.

    சட்டசபையா? பாஜகவின் பரிசோதனை கூடமா? பெரும்பான்மை குறித்து சித்தராமையா ஆவேசம் சட்டசபையா? பாஜகவின் பரிசோதனை கூடமா? பெரும்பான்மை குறித்து சித்தராமையா ஆவேசம்

    மேலும் அந்த வீடியோவை பார்த்து பேசிய முதல்வர் முதல்வர் திரிவேந்தர சிங் ராவத், விலங்குகளில் பசுக்கள் மட்டுமே ஆக்ஸிஜனை வெளியிடுவதாக தெரிவித்தார். பசுக்களால் மனிதர்களின் சுவாச பிரச்னைகள் குணப்படுத்த முடிவதாகவும், பசுக்களுடன் நெருக்கமாக வாழும் போதும் காச நோயை குணப்படுத்த முடியும் என்றும் முதல்வர் தெரிவித்தார். முதல்வரின் இந்த பேச்ச சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பபாக உத்தர்காண்ட் பாஜக தலைவர அஜய் பட் பாகேஸ்வர் மாவட்டத்தில் பேசுகையில், கர்ப்பிணி பெண்கள் கங்கை நீரை பருகினால் அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

    இதனிடையே முதல்வர் திரிவேந்தர சிங் ராவத் பேச்சு சர்ச்சையாகி உள்ள நிலையில் உத்தர்காண்ட் மாநில முதல்வர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் "பசுவின் பால் மற்றும் கோமியம் மருந்தாக பயன்படுவதாக மக்கள் நம்புகிறார்கள். இதேபோல் பசுக்கள ஆக்ஸிஜனை வெளியிடுவதாகவும் நம்புகிறார்கள். எனவே மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் தான் முதல்வர் அவ்வாறு பேசியிருந்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Uttarakhand Chief Minister Trivendra Singh Rawat said on that cow is the only animal which inhales and exhales oxygen. and adding that massaging a cow can cure one's breathing problems.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X