For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உத்தரகாண்டில் மேக-வெடிப்பினால் கனமழை: 30 பேர் பலி- தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டி வருகிறது. ஆறுகளில் அபாயப்பகுதியை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வெள்ளம் விபத்து சம்பவங்களில் 30 பேர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினரும், ராணுவமும் மீட்டு வருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் மேக-வெடிப்பு காரணமாக கடந்த 2 மணிநேரமாக சாமோலி , பித்தோராகர் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. கனமழையினால் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவினால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேக-வெடிப்பு காரணமாக 50 சதுர அடி கிலோ மீட்டர் பகுதியில் சுமார் 2 மணி நேரங்களில் 100 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. கனமழை காரணமாக பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 30 பேர் பலியாகி உள்ளனர் என்று தெரியவந்து உள்ளது. வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

சாமோலி மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் அலக்நந்தா ஆற்றில் அபாய பகுதியை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. மக்கள் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தின் மத்தியில் சிக்கி உள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மற்றும் மாநில மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். ராணுவ வீரர்களும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

சிங்காலி, பாத்தாகோட், ஒங்லா மற்றும் தால் கிராமங்களில் மேக-வெடிப்பு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்று பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்து உள்ளது. கிராம மக்கள் இடர்பாடுகளுக்குள் சிக்கிஉள்ளனர் என்றும் மீட்பு குழுவினர் அவர்களை மீட்பதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அலக்நந்தா ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு சென்று உள்ளனர் என்றும் மற்றொரு குழு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறிஉள்ளார்.

வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கவும் முதல்வர் ஹரிஷ் ராவத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் பெய்த திடீர் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் மாயமாகினர். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அதேபோன்ற ஒரு வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் பேரழிவு ஏற்படுமோ என்று மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

English summary
Heavy rains triggered cloudbursts in several districts of Uttarakhand, killing many people and washing away houses, on Friday. The death toll due to incessant rains in Chamoli and Pithoragarh, rose to 30.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X