For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிரான்ஸ்பர் கேட்டு வாக்குவாதம்- ஆசிரியரை தூக்கி ஜெயிலில் போட சொன்ன உத்தரகாண்ட் முதல்வர்-வைரல் வீடியோ

பணியிட மாறுதல் கேட்ட ஆசிரியரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் உத்தரகாண்ட் முதல்வர்.

By Mathi
Google Oneindia Tamil News

டேராடூன்: தமக்கு பணியிட மாறுதல் கேட்டு வாக்குவாதம் செய்த ஆசிரியரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார் உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர ராவத்.

Uttarakhand CM orders arrest of woman teacher over transfer argument

டேராடூனில் பள்ளிக் கல்வித்துறைக்கான குறைதீர்ப்பு கூட்டமான ஜனதா தர்பார் முதல்வர் திரிவேந்திர ராவத் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் உத்தர பகுகுணா என்ற ஆசிரியையும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் போலீசாரை தள்ளிவிட்டு முதல்வரை நோக்கி வேகமாக சென்றார் உத்தர பகுகுணா. முதல்வரிடம், கால் நூற்றாண்டு காலமாக தொலை தூர இடத்தில் பணிபுரிகிறேன். மாருதலே கிடைக்கவில்லை என அழுது புலம்பினார்.

அப்போது ஆவேசமாகவும் சில வார்த்தைகளுடன் அந்த ஆசிரியை பேசினார். இதனால் ஆத்திரமடைந்த முதல்வர் திரிவேந்திர ராவத், இவரை கைது செய்து ஜெயிலில் போடுங்க என போலீசாருக்கு உத்தரவிட்டார். அத்துடன் ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் வீடியோவாக பரவி வருகிறது.

English summary
Uttarakhand Chief Minister Trivendra Rawat directed the police to arrest a schoolteacher after she protested during a Janata Darbar session in Dehradun.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X