For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

4 நாளா பற்றி எரியும் உத்தரகாண்ட் காடுகள்.. கடும் வெயிலால் தீ விடாமல் எரிகிறது!

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டுக்கு நேரம் சரியில்லையா அல்லது உலகத்துக்கு நேரம் சரியில்லையான்னு தெரியலை.. கொரோனா ஒருபக்கம் போட்டுத் தாக்கும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் காட்டுத் தீயால் பெரும் சேதத்தை வனங்கள் சந்தித்து வருகின்றன.

கடந்த நான்கு நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து கொண்டிருப்பதால், உத்தரகாண்ட் மாநிலத்தின் வன வளம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுடன் போராடிக் கொண்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் வெட்டுக்கிளி படையெடுப்பையும் சேர்த்து சந்தித்து தவித்துக் கொண்டுள்ளது.

மறுபக்கம் உத்தரகாண்ட் மாநிலத்தில் இப்படி ஒரு அசம்பாவிதம். கடந்த நான்கு நாட்களாக எரிந்து கொண்டுள்ள காட்டுத் தீயால் பெருமளவில் வன இழப்பு ஏற்பட்டுள்ளது . தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர்.

மே 31ம் தேதிக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்குமா? மருத்துவக்குழு அளித்த பரிந்துரை என்ன மே 31ம் தேதிக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்குமா? மருத்துவக்குழு அளித்த பரிந்துரை என்ன

கடும் வெயில் தீ

கடும் வெயில் தீ

வட இந்தியாவில் ஏற்கனவே கடும் வெயில் காரணமாக அனல் காற்று வீசிக் கொண்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு கடும் வெயில் தாக்கி வருகிறது. அனலைத் தாங்க முடியாமல் மக்கள் தவிக்கும் நிலையில் உத்தரகாண்ட் காட்டுத் தீயும் எரியும் கொள்ளியில் பெட்ரோலை ஊற்றுவது போல வந்து சேர்ந்துள்ளது.

தீயில் கருகும் விலங்குகள்

இந்த கடும் வெயில் மற்றும் அனல் காரணமாகத்தான் உத்தரகாண்ட் மாநிலத்தில் காட்டுத் தீ பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. தீ கட்டுக்குள் வராமல் இருக்க இந்த கடும் வெயிலும் முக்கியக் காரணமாகும். பல ஏக்கர் பசுமையான வனப் பகுதிகள் கருகிப் போய் விட்டன. ஏராளமான வன விலங்குகளும் தீயில் கருகிப் போய் விட்டன. கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா காட்டுத் தீ சம்பவத்தை நினைவுபடுத்துவது போல உத்தரகாண்ட் நிகழ்வு உள்ளது.

கடும் பாதிப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் 46 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு பற்றி எரிந்து கொண்டுள்ளது. குமான் பிராந்தியத்தில்தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். இங்கு மட்டும் 12 இடங்களில் தீப்பிடித்து எரிந்து கொண்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கிட்டத்தட்ட 51.43 ஹெக்டேர் அளவுக்கு வனப் பகுதிகள் இதுவரை தீயில் கருகிப் போய் விட்டன. கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட அரிய வகை விலங்குகளுக்கு தற்போது அழிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

கட்டுப்படுத்தாவிட்டால் சிக்கல்

கட்டுப்படுத்தாவிட்டால் சிக்கல்

சமீபத்தில் அமேஸான் வனப்பகுதியில் ஏற்பட்ட மிகப் பெரிய காட்டுத் தீயில் பல அரிய வகை விலங்குகள் கருகிப் போயின. பெருமளவிலான காட்டுப் பகுதியும் கருகிப் போனது. அதே போலத்தான் ஆஸ்திரேலியாவிலும் மிகப் பெரிய காட்டுத் தீவிபத்தை உலகம் பார்த்தது. தற்போது அழகான உத்தரகாண்ட் மாநிலத்தின் வனப்பகுதி தொடர்ந்து எரிந்து கருகிக் கொண்டிருக்கிறது. தீயை வேகமாக கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் உத்தரகாண்ட் வன வளம் பெரும் சேதத்தை சந்திக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Recommended Video

    வடஇந்தியாவை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகள்.. தமிழகத்திற்கும் வருமா?

    English summary
    A big forest fire has engulfed the Uttarakhand forest for the 4th day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X