For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பலூன் மூலம் மாநிலம் முழுக்க இண்டெர்நெட்.. உத்தரகாண்டில் அல்டிமேட் தொடக்கம்!

உத்தரகாண்டில் எல்லா இடங்களையும் இணைக்கும் வகையில் பலூன் மூலம் இண்டர்நெட் வழங்கப்படுகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    உத்தரகாண்டில் பலூன் இண்டெர்நெட்.. அல்டிமேட் தொடக்கம்!

    டேராடூன்: உத்தரகாண்டில் எல்லா இடங்களையும் இணைக்கும் வகையில் பலூன் மூலம் இண்டர்நெட் வழங்கப்படுகிறது.

    இதற்காக ஹீலியம் பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளது. டேராடூன் ஐடி பார்க்கில், நேற்று அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்தியாவிலேயே ஒரு மாநிலம் முழுக்க இண்டெர்நெட் மூலம் இணைக்க பலூனை பயன்படுத்துவது இதுவே முதல்முறை. கூகுள் இயற்கை பேரழிவு ஏற்பட்ட பகுதிகளில், இண்டெர்நெட் வழங்க இந்த முறையை பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

    எத்தனை நாள்

    எத்தனை நாள்

    இந்த பலூன் ஹீலியம் மூலம் பறக்கும். இதில் கேமராவும் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 மீட்டர் நீளத்திற்கு ஆன்டெனா ஒன்று இருக்கும். இதன் மூலம் 14 நாட்களுக்கு தொடர்ந்து பறக்க முடியும். அதன்பின் மீண்டும் ஹீலியம் நிரப்பி பறக்க விடுவார்கள். இது வைஃபை மூலம் நெட் வழங்கும்.

    வேகம்

    வேகம்

    இதில் ஒரு பலூனை பறக்க உருவாக்க 50 லட்சம் ரூபாய் செலவாகும். இதன் மூலம் 7.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இணையம் வழங்க முடியும். 5 எம்பிபிஎஸ் என்ற அதிவேகத்தில் இந்த வைஃபை செயல்படும். இதை யார் வேண்டுமானாலும், பாஸ்வேர்ட் இல்லாமல் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

    எந்த இடத்தில்

    எந்த இடத்தில்

    உத்தரகாண்டில் சுமார் 680 கிராமங்களில் தற்போது இணைய வசதி இல்லை. இந்த கிராமங்களில் எல்லாம் இந்த பலூன் பறக்கவிடப்பட உள்ளது. சுமார் 1000 பலூன்கள் பறக்கவிடப்படவுள்ளது. இரண்டு வாரத்திற்கு ஒருமுறை பலூனில் காற்று ஏற்றி மீண்டும் பறக்க விட உள்ளனர். இது தொடர்ச்சியாக செய்யப்படும். இதற்கென்று பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

    ஏன் இவ்வளவு

    ஏன் இவ்வளவு

    சமீப காலமாக இந்த மாநிலத்திற்கு அதிக அளவில் பயணிகள் வருகிறார்கள். ஆனால் அவர்கள் இணைய வசதி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். இவர்களுக்காகவே தற்போது, இந்த பலூன்கள் பறக்கவிடப்பட உள்ளது. இது அம்மாநில மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

    English summary
    Uttarakhand gives balloon-based internet with high speed to its people for free.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X