For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கால் உடைந்த குதிரை சக்திமானுக்கு செயற்கைக் கால் பொருத்தம்... வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டேராடூன்: பாஜக எம்எல்ஏவால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட சக்திமான் குதிரையின் அடிபட்ட கால் அறுவை சிகிச்சை மூலம் வியாழக்கிழமை அகற்றப்பட்டது. ராணுவ டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து குதிரை சத்திமானுக்கு செயற்கைக் கால் பொருத்தியுள்ளனர். இதனையடுத்து மீண்டும் ஜம்மென்று நிற்கிறது சக்திமான்.

உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 7 ஆண்டுகளாக சக்திமான் வெள்ளை குதிரை காவல் துறையில் பணியாற்றி வருகிறது. முக்கியமான நிகழ்ச்சிகளின்போது நடைபெறும் காவல் துறை அணிவகுப்பில் இந்த குதிரை பங்கேற்று வந்தது.

இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் மாநில அரசுக்கு எதிராக பாஜக சார்பில் அண்மையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பாஜக எம்எல்ஏ கணேஷ் ஜோஷி சக்திமான் குதிரையை தாக்கினார். இதனால் அதன் கால் முறிந்தது.

எம்எல்ஏ ஜோஷியின் செய்கைக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இந்த விவகாரத்தில், பாஜக எம்.எல்.எ ஜோஷி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், குதிரையை தாக்கியதாக பாஜகவைச் சேர்ந்த பிரமோத் போரா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, காயமடைந்த குதிரைக்கு ராணுவ டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். குதிரை வலியால் துடித்து வருவதாகவும், நிற்க முடியாமல் அவதிப்படுவதாகவும் மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, குதிரை சத்திமான் கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

குதிரையின் உயிரை காக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உத்தராகண்ட் போலீஸ் டிஜிபி பி.எஸ்.சித்து தெரிவித்தார். காலை அகற்றாவிட்டால் கிருமி தொற்று காரணமாக குதிரை உயிரிழக்கக்கூடும் மருத்துவர்கள் கூறியதையடுத்து அதன் கால் அகற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சக்திமான் குதிரை உணவருந்த மறுத்து விட்டது.

இதனையடுத்து குதிரை சக்திமானுக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. இதன்பின்னரே ஜம்மென்று நின்று கொண்டு சக்திமான் உணவருந்தியது.

அறுவை சிகிச்சையை அடுத்து குதிரையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செயற்கைக்கால் பொருத்தப்பட்ட குதிரையின் புகைப்படங்கள் அனைவரையும் கண்கலங்க செய்து உள்ளது.

பாஜக எம்.எல்.ஏ.வை வசைப்பாடிய சமூக வலைதள பயனாளர்கள், பாஜக தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்நிலையில் குதிரையின் காலை உடைத்த பாஜனதா எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷியை டேராடூனில் காவல்துறையினர் கைது செய்தனர்.

English summary
Shaktimaan, the horse which suffered multiple fractures on its left hind leg after being allegedly attacked by BJP MLA Ganesh Joshi, had his leg amputated in order to save his life.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X