For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உருது மொழிக்கு மாற்றாக சமஸ்கிருதம்.. உத்தரகாண்ட் ரயில் நிலையங்களில் வருகிறது அதிரடி மாற்றம்

Google Oneindia Tamil News

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் ரயில் நிலையத்தில் ஊர் பெயர் பலகைகள் உருது மொழிக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் மாற்றப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

பிரபல ஆங்கிலம் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திகளின்படி , ரயில்வே அதிகாரிகள் இது பற்றி கூறுகையில் ரயில்வே பதிவேட்டில் உள்ள விதிகளின்படி, ரயில் நிலையங்களின் பெயர்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் அந்த குறிப்பிட்ட மாநிலத்தின் இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியில் இருக்க வேண்டும்.

Uttarakhand railway signboards to replace Urdu with Sanskrit due to second official language: official

2010ஆம் ஆண்டு, உத்தராகண்ட் அரசாங்கம், அம்மாநிலத்தின் இரண்டாம் மொழி அந்தஸ்தை சமஸ்கிருதத்திற்கு அளித்து அதிகாரப்பூர்வ ஆணையை வெளியிட்டு இருந்தது. இந்தியாவில் முதன்முதலாக சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக அறிவித்தது உத்தராகண்ட் மாநிலம் தான்.

அரசுக் கார், பயணப்படி வேண்டாம்.. அதிமுக ஒன்றிய கவுன்சிலரின் ஷாக் அன்ட் சபாஷ் மனு.. நாகையில் பரபரப்புஅரசுக் கார், பயணப்படி வேண்டாம்.. அதிமுக ஒன்றிய கவுன்சிலரின் ஷாக் அன்ட் சபாஷ் மனு.. நாகையில் பரபரப்பு

எனவே இனி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள பெயர் பலகைகள் உருது மொழிக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் மாற்றப்படும். தற்போது இந்தி, ஆங்கிலம் மற்றும் உருதுவில் எழுதப்பட்டிருக்கும் பலகைகள், இனி இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்திற்கு மாற்றப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

உத்தரகாண்ட் முதல்வர் ரமேஷ் போக்ரியல், சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறி 2010ம் ஆண்டு 2வது அலுவல் மொழியாக அறிவித்தது. இதே பாணியில் 2019ல் இமாச்சல பிரதேசமும் சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக அறிவித்தது.

English summary
Sanskrit is the second official language of Uttarakhand, the names of railway stations written in Urdu on platform signboards in the state will be replaced with those in Sanskrit: the official
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X