For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போதை, கஞ்சா, பெண்கள்! முன்னாள் பாஜக தலைவர் மகன் ரிசாட்டில் அட்டூழியம்! அதிர வைத்த முன்னாள் ஊழியர்கள்

Google Oneindia Tamil News

ஹரித்துவார்: உத்தரகண்ட்டில் பெண் வரவேற்பாளர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சம்மந்தப்பட்ட ரிசார்ட் குறித்துப் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் முன்பு அமைச்சராக இருந்தவர் வினோத் ஆர்யா. இவரது மகன் புல்கித் ஆர்யா அங்குள்ள பௌரி மாவட்டத்தில் ரிசார்ட்டை நடத்தி வந்தார்.

இதற்கிடையே கடந்த வாரம் அந்த ரிசார்ட்டில் பணிபுரிந்து வந்த இளம் பெண் திடீரென மாயமானார். 19 வயதான அந்த அங்கிதா பண்டாரி ரிசார்ட்டில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தார்.

 விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தல்! உ.பி-இல் 61%, கோவாவில் 79%, உத்தரகண்ட்டில் 62% வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தல்! உ.பி-இல் 61%, கோவாவில் 79%, உத்தரகண்ட்டில் 62% வாக்குப்பதிவு

மாயம்

மாயம்

இதனால் பதறிய பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி உள்ளனர். இருப்பினும், அவர் கிடைக்காத நிலையில், போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும், அங்கிதா பண்டாரியின் பெற்றோர் உருக்கமாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தனர். அதில் தங்கள் மகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சுவதாகவும் இதற்கு ரிசார்ட் உரிமையாளர் புல்கித் ஆர்யா தான் காரணம் என்றும் கண்ணீருடன் கூறி இருந்தனர். அந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது.

கொலை

கொலை

பலரும் புல்கித் ஆர்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். போலீஸ் விசாரணையில் ரிசார்ட்டில் வேலை செய்யும் இருவரின் உதவியுடன் புல்கித் ஆர்யா தான் அங்கிதாவை கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தது. அதாவது அங்கிதா தன்னுடனும் ரிசார்ட்டிற்கு வருவோருடனும் உடலுறவு கொள்ள வேண்டும் என்று புல்கித் ஆர்யா மிரட்டி உள்ளார்.

 என்ன காரணம்

என்ன காரணம்

இதற்கு அங்கிதா தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அங்கிதாவை கடுமையாகத் தாக்கியுள்ளார் புல்கித் ஆர்யா. மேலும், அவரது உடலை அருகில் இருந்த கால்வாயிலும் போட்டுள்ளான். மேலும், அந்த ரிசார்ட் முறைகேடாகக் கட்டப்பட்டு உள்ளதாகக் கூறி உத்தரகண்ட் பாஜக அரசை ஓரே இரவில் அதை இடித்து தரைமட்டமாக்கியது. இதனால் புல்கித் ஆர்யாவின் தந்தை வினோத் ஆர்யா பாஜகவில் இருந்தும் நீக்கப்பட்டார்.

 மது, கஞ்சா

மது, கஞ்சா

இதற்கிடையே அந்த ரிசார்ட் குறித்து சில அதிர்ச்சி தகவல்களை அங்கு இதற்கு முன்பு பணிபுரிந்தவர்கள் பகிர்ந்து கொண்டு உள்ளனர். அதாவது அந்த ரிசாட்டில் போதைப்பொருள் பயன்பாடும், விபசாரமும் வழக்கமாகவே நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக இரு மாதங்களுக்கு முன்பு அங்கு வரவேற்பாளராக பணிபுரிந்த ரிஷிதா கூறுகையில், "அங்கு மதுபானம், கஞ்சா உள்ளிட்ட எல்லா போதைப் பொருளையும் விருந்தினர்களுக்குக் கொடுப்பார்கள். அவ்வளவு ஏன் பெண்களையும் கூட விபசாரத்திற்கு வழங்குவார்கள்" என்றார்.

 விபசாரம்

விபசாரம்

தற்போது கொலை செய்யப்பட்ட அங்கிதா அங்கு வரவேற்பாளராகச் சேரும் முன்பு வரை ரிஷிதா தான் அங்கு பணியாற்றி வந்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "என்னையும் விபசாரத்திற்குத் தள்ளப் பார்த்தார்கள். நான் மறுத்துவிட்டேன். இதனால் என்னை அவர்கள் ஆபாசமாகத் திட்டுவார்கள்.. காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் திட்டுவார்கள்" என்றார். அவரது கணவர் விவேக்கும் அதே ரிசார்ட்டில் பணிபுரிந்து வந்தார்.

 மிரட்டல்

மிரட்டல்

ரிஷிதா விபசாரத்தில் ஈடுபட மறுத்ததால் அவரது கணவர் விவேக்கை அவர்கள் அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விவேக் கூறுகையில், "என்னை அவர்கள் அடித்து பிளாக்மெயில் செய்தனர். மன ரீதியாகவும் என்னை டார்சர் செய்தனர். ரிசார்ட்டில் அவர்கள் செய்யும் அசிங்கத்தை என்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. இதனால் ஒரே மாதத்தில் வேலையை விட்டுவிட்டேன். இருப்பினும், இதுபோல மீண்டும் நடக்காது என்று கூறி என்னை மீண்டும் வேலைக்குக் கூப்பிட்டார்கள்.

 பிளாக்மெயில்

பிளாக்மெயில்

நானும் நம்பி சேர்ந்தேன். ஆனால் சில நாட்களிலேயே மீண்டும் அவை தொடர்ந்தது. இது தொடர்பாக நான் புகார் அளித்த போது விசாரணைக்கு வந்த அதிகாரியும் புல்கித் உடன் இணைந்து என்னை அடிக்க தொடங்கிவிட்டார். என்னிடம் இருந்து வலுக்கட்டாயமாக மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு பிளாக்மெயில் செய்தனர். இதையெல்லாம் தாங்க முடியாமல் நாங்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.

English summary
All illegal actvities are very common in Ex BJP leader's son resor says Ex employee: Uttarkand receptionist case latest updates in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X