For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடும்பத்தை மீறி திருமணம்.. இளம்பெண் படுகொலை.. 3 சகோதரர்களுக்கு தூக்கு.. நீதிமன்றம் அதிரடி

Google Oneindia Tamil News

டேராடூன்: உத்தரகாண்டில் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த பெண்ணை, அவரது 3 சகோதரர்கள் ஆயுதங்களால் தாக்கி, கோடரியால் வெட்டி படுகொலை செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரது 3 சகோதரர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

உத்தரகாண்டின் ஹரித்வார் மாவட்டம் ஷாபூர் கிராமத்தை சேர்ந்தவர் ப்ரீத்தி சிங். இவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த பிரிஜ் மோகன் என்பவரை விரும்பினார்.

இருப்பினும் பிரிஜ் மோகனை திருமணம் செய்ய ப்ரீத்திசிங்கின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. பலமுறை கெஞ்சியும் குடும்பத்தினர் உடன்படவில்லை.

ஆத்தாடி.. திருமணம் பின் 3 நாள் பாத்ரூம் போக கூடாதாம்.. இந்தோனேசியாவில் வினோத நடைமுறை.. பரபர காரணம்ஆத்தாடி.. திருமணம் பின் 3 நாள் பாத்ரூம் போக கூடாதாம்.. இந்தோனேசியாவில் வினோத நடைமுறை.. பரபர காரணம்

 குடும்பத்தை மீறி திருமணம்

குடும்பத்தை மீறி திருமணம்

இதனால் ப்ரீத்தி சிங் வீட்டை விட்டு வெளியேறி குடும்பத்தினர் எதிர்ப்பையும் தாண்டி பிரிஜ் மோகனை திருமணம் செய்தார். இந்த சம்பவம் கடந்த 2014ம் ஆண்டு நடந்தது. இதனால் குடும்பத்தினர் கடும் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து அவருடன் குடும்பத்தினர் பேசவில்லை. இருப்பினும் ப்ரீத்தியை கொலை செய்ய வேண்டும் என அவரது சகோதரர்கள் திட்டமிட்டு வந்தனர்.

படுகொலை

படுகொலை

அதன்படி ப்ரீத்தியிடம் அவரது சகோதரர்களான குல்தீப் சிங், அருண் சிங் ஆகியோர் பேசினர். கானாப்பூரில் உள்ள அப்டிபூர் கிராமத்துக்கு வந்தால் குடும்பத்தோடு இணைத்து கொள்வதாக தெரிவித்தனர். இதையடுத்து குடும்பத்தோடு இணையும் ஆசையில் ப்ரீத்தி அப்டிபூர் கிராமத்துக்கு வந்தார். அப்போது அங்கு வைத்து சகோதரர்களான குல்தீப் சிங், அருண் சிங் மற்றும் பெரியப்பா மகன் ராகுல் ஆகியோர் ப்ரீத்தியை ஆயுதங்களால் தாக்கியும், கோடரியால் வெட்டியும் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் 2018 ம் ஆண்டு நடந்ததது.

மூவரும் கைது

மூவரும் கைது

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ப்ரீத்தியின் சகோதரர்களான குல்தீப் சிங், அருண் சிங் மற்றுமு் பெரியப்பா மகன் ராகுல் ஆகியேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஹரித்வார் மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

தூக்கு தண்டனை விதிப்பு

தூக்கு தண்டனை விதிப்பு

குற்றப்பத்திரிகைதாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி லக்சார் சங்கர்ராஜ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இந்த தீர்ப்பபை கேட்டு மூவரும் கண்கலங்கினர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

English summary
In Uttarakhand, a married woman was attacked by her 3 brothers with weapons and hacked to death with an axe. The court sentenced all three of his brothers to death by hanging.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X