For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாமியார் கனவில் வந்த தெய்வம்.. அசைவ உணவை கைவிட்ட இரு கிராம மக்கள்

Google Oneindia Tamil News

டேராடூன்: கனவில் வந்து சாமி அருள்வாக்கு கூறியதற்காக 2 கிராம மக்கள் அசைவ உணவை சாப்பிடாமல் கைவிட்டுள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பம்பா மற்றும் பர்கியா என்ற இரு கிராமங்கள் உள்ளன. இமயமலையின் மேல் பகுதியில் சினோ மற்ரும் இந்திய எல்லையில் அமைந்துள்ள கிராமத்தின் 350 குடும்பங்கள் அசைவ உணவு சாப்பிடுவதுடன் கடவுளுக்கு உயிர்ப்பலி கொடுப்பதும் வழக்கம்.

Uttarkhand village people give up taking Non Veg food

6 மாத குளிர்காலமாக இருக்கும் என்பதால் கிராமத்தினர் கீழே வந்துவிடுவர். உடன் அவர்கள் கும்பிடும் சாமியையும் கொண்டு வந்துவிடுவார்கள். திரும்பி கிராமத்திற்கு செல்லும்போது சாமியை கோவிலுக்குள் வைத்து விடுவர். இதன்பிறகு கிராம கவுன்சில் கூடி ஒரு நாளை தேர்வு செய்து கடவுளுக்கு விலங்குகளை உயிர்ப் பலி கொடுத்து. அந்த மாமிசத்தை சமைத்து உட்கொள்வர்.

இந்த நிலையில் அண்மையில் அங்கு பகவத் காதை நடந்தது. இது ஜூன் 28-ஆம் தேதி வரை நடந்தது. இதற்கான சடங்குகள் முடிந்த பிறகு அதை நடத்தும் சாமியாருக்கு அருள் வந்தது. அப்போது ஒரு ஆண்டிற்கு விலங்குகளையும் நாம் பலி கொடுக்கக் கூடாது. அசைவ உணவு சாப்பிடுவது, விலங்கு பலி ஆகியவற்றை பகவத் காதை நடந்த கிராமங்களில் கொடுக்கக் கூடாது.

இதை தெய்வங்கள் என் கனவில் கூறியுள்ளன. மீறினால் தெய்வக் குற்றமாகிவிடும் என கூறியுள்ளார். சாமியாரின் வாக்கை ஏற்று 2 கிராம மக்களும் அசைவ உணவை கைவிட்டதுடன் ஒரு ஆண்டுக்கு உயிர் பலியையும் தவிர்த்து வருகின்றனர்.

English summary
Two villages of Chamoli District have decided to give up animal sacrifice and taking non veg as food.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X