For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அசிங்கப்பட்ட போலீஸ்.. தாய் சாவுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க இந்த சிறுமி என்ன செய்தார் தெரியுமா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: தாய் தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க தனது உண்டியல் பணத்தை போலீசாரிடம் லஞ்சமாக கொடுத்து திடுக்கிட வைத்துள்ளார் 5 வயது சிறுமி.

உத்தரபிரதேச மாநிலத்தின், மீரட்டில் வசிக்கும் 5 வயதான சிறுமமி, மான்வி, செவ்வாயன்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராம் குமார் அலுவலகத்திற்கு வந்திருந்தார். மான்வியின் தாயார், சீமா கௌஷிக், அவரது கணவர் சஞ்சீவ் குமார் மற்றும் கணவன் குடும்பத்தாரால் வரதட்சணை தொந்தரவு செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டதாகவும், தனது தாயின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுமி கூறினார்.

மேலும் தனது கையிலிருந்த உண்டியலை போலீசாரிடம் கொடுத்து, இதை லஞ்சமாக வைத்துக்கொண்டு நடவடிக்கை எடுங்கள் என கூறினார். போலீசார் இதுவரை இந்த வழக்கில் சுணக்கம் காட்டி வந்த நிலையில், சிறுமி இவ்வாறு உண்டியல் பணத்தை கொடுத்து அசிங்கப்படுத்தியுள்ளார்.

சஞ்சீவ் குமார், அவரது தந்தை மற்றும் இரண்டு சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சீமாவின் தந்தை சாந்தி ஸ்வரூப் போலீசில் புகார் கொடுத்தார். ஆனால், சஞ்சீவ் குமார் மட்டும் கைது செய்யப்பட்டார். அவரது உறவினர்களை கைது செய்ய, போலீசார் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சிறுமி இவ்வாறு உண்டியலை கொடுத்துள்ளார்.

சம்பவம் குறித்து அறிந்த, போலீஸ் ஐ.ஜி. கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறி, சிறுமியை அனுப்பி வைத்தார். மேலும், லஞ்சம் கேட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

English summary
In a shameful act of dowry, it has been discovered that a five-year-old girl walked into the office of IG police in Meerut district and urged the police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X