For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வர் அலுவலக ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய தடை: ராஜஸ்தான் அரசு அதிரடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதல்வர் அலுவலகத்தில் பணி புரியும் அரசு ஊழியர்கள் டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிய முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் யாராக இருந்தாலும், ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிய முற்றிலும் தடைவிதிக்கபட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாநில முதல் மந்திரி வசுந்தரா ராஜே இன்று பிறப்பித்துள்ளார்.

Vasundhara bans CMO staff from wearing jeans, T-shirts at work

அம்மாநில அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது: முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் ஜீன்ஸ் மற்றும் சர்ட் அணிய தடை விதிக்கபடுகிறது.

தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அரசு விழாக்களில் கலந்து கொள்ளும்போது போட்டோகிராபர்கள் எடுக்கும் போட்டோக்களில், நாகரீகமான உடைகள் அணிந்திருப்பது வெளியுலகத்திற்கு தெரிய வேண்டும். நம்முடைய கலாச்சரத்தை இது பறைசாற்றுவதாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
The Rajasthan government has officially banned the Chief Ministers' Office (CMO) staff from wearing casuals such as jeans and T-shirts while on duty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X